மலையில் உரசுர மாதிரி.. அண்ணாந்து பார்த்த மக்களுக்கு ஷாக்! கொடையை வட்டமிட்ட மர்ம ஹெலிகாப்டர்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கொடைக்கானல் நகர் பகுதியில் மிக தாழ்வாக மின் கம்பங்கள் மற்றும் வானுயர்ந்த கட்டடங்கள் அருகே பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு நிலவியது. இரண்டு முதல் மூன்று முறை வரை வட்டமிட்ட அந்த ஹெலிகாப்டர் மின்சார கம்பிகள் அருகேவும் வானுயர்ந்த கட்டடங்களை தொடும் அளவிற்கு மிகவும் தாழ்வாக பறந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

"மலைகளின் இளவரசி" என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலா மலை வாசஸ்தலமாக விளங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

Kodaikanal helicopter

இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், ரோஜா தோட்டம், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கூட்டமாக இயற்கை அழகை கண்டு ரசித்தும் புகைப்படங்களை எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

மேலும் சுற்றுலாப்பயணிகள் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச் சாலையை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்வர். இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள மலைப்பகுதிகள் தரைதலங்கள் போல் இல்லாமல் ஆங்காங்கே உள்ள மலை குன்றுகள் மற்றும் உயரமான பகுதிகளில் அதிக அளவில் கட்டடங்கள் உள்ளது.

சமதளங்கள் போல் இல்லாமல் கட்டிடங்கள் ஒன்றுக்கு பின் ஒன்று முரணாக இருந்து வரக்கூடிய நிலையில் இன்று காலையில் ஹெலிகாப்டர் ஒன்று கொடைக்கானல் நகர் பகுதியில் இரண்டு முதல் மூன்று முறை வரை வட்டமிட்டது.

இதில் பறந்து வந்த ஹெலிகாப்டர் மின்சார கம்பிகள் அருகேவும் வானுயர்ந்த கட்டடங்களை தொடும் அளவிற்கு மிகவும் தாழ்வாக பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மிகவும் தாழ்வாக பரந்த ஹெலிகாப்டரை கொடைக்கானலில் இருந்த மக்கள் மிகவும் வியப்புடனும் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்ற நோக்கில் பார்த்தனர். பலர் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரை செல்போன்களில் படம் பிடித்தனர்.

ஆனால் அந்த ஹெலிகாப்டர் யாருக்கு சொந்தமானது? எங்கு தரை இறங்கியது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்திய விளக்கம் அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+