குழந்தைக்கு பனியாரம் ஊட்டி வாக்கு கேட்ட மன்சூர் அலிகான்... திண்டுக்கல்லில் ருசிகரம்!
திண்டுக்கல்: தன்னை வேடிக்கை பார்க்க வந்த பெண்ணின் குழந்தைக்கு பனியாரம் ஊட்டிவிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
மாம்பழத்துக்கு பதில் ஆப்பிளுக்கு ஓட்டுப்போடுமாறு இதுவரை இரண்டு முறை வாய் தவறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு கேட்டுவிட்டார். ஆனால் அதே திண்டுக்கல் நகரில நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், பல வித்தியாசமான விஷயங்களை செய்து மக்களை கவர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் கடையில் பஜ்ஜி, வடை சுட்டு வாக்கு கேட்டார். இதேபோல் ஊசி மணி, பாசி மணி விற்றும் வாக்கு கேட்டார். டீக்கடையில் டீ குடித்த படியும் வாக்கு கேட்டார்.
இதனிடையே இன்று திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார். நாராயணம் பிள்ளை தோட்டத்தில் வாக்கு கேட்ட அவர், தெருவோரம் பலாகாரம் விற்கும் கடையில் அமர்ந்து சாப்பிட்டார்.
மன்சூர் அலிகான் நடிகர் என்பதால் அப்போது ஏராளமான மக்கள் அங்கு அவரை பார்க்க கூடினார்கள். அங்கு தன்னை வேடிக்கை பார்க்க வந்த பெண்ணின் குழந்தைக்கு பனியாரம் ஊட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏராளமான இளைஞர்கள் மன்சூர் அலிகானுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications