திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டுக்கல் அருகே 'அணிந்திருந்த சட்டையில் ' தூக்கு மாட்டி வடமாநில தொழிலாளி தற்கொலையால் சர்ச்சை!

Google Oneindia Tamil News

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலை விடுதி வளாகத்தில் வட மாநில தொழிலாளி ஒருவர் அணிந்திருந்த சட்டையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேடசந்தூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கடும் வறட்சி நிலவியது. அப்போது வேடசந்தூர் தாலுகா மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அப்பகுதி வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டு தொழில்கள் தொடங்க சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இதனால் வேடசந்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஏரளமான தனியார் நூற்பாலைகள் உருவாகின.

ஐலேசாவான கைலாசா! கோமா என்பதெல்லாம் ட்ராமாவா? புது ரூட்டில் ஆட்டைய போட திட்டம் போட்ட நித்யானந்தா..! ஐலேசாவான கைலாசா! கோமா என்பதெல்லாம் ட்ராமாவா? புது ரூட்டில் ஆட்டைய போட திட்டம் போட்ட நித்யானந்தா..!

வட மாநில தொழிலாளர்கள்

வட மாநில தொழிலாளர்கள்

இந்த தனியார் நூற்பாலைகளில் வேடசந்தூர் பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பல்லாயிரக்கணக்கில் பணியாற்றுகின்றனர். குக்கிராமங்களுக்கும் கூட நூற்பாலை வாகனங்கள் சென்று தொழிலாளர்களை அழைத்து வருகின்றன. அண்மைகாலமாக நூற்பாலைகளில் குறைந்த ஊதியத்துக்கு பணிபுரிய கொத்து கொத்தாக வடமாநில தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக கொண்டுவரப்படும் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு உணவும் வழங்கப்படுகிறது. இதனால் வேடசந்தூர் பகுதியில் இந்தி எழுத்துகள் மட்டுமே கொண்டே உணவகங்கள் கூட முளைத்துவிட்டன.

ஒடிஷா இளைஞர்

ஒடிஷா இளைஞர்

இந்நிலையில் வேடசந்தூர் நாகம்பட்டியில் இயங்கி வரும் பிரபு ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றிய ஒடிஷாவை சேர்ந்த சோவன தாஸ் மரக்கிளை ஒன்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோவன தாஸ், ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர். கடந்த 6 மாதமாக இந்த மில்லில் பணிபுரிந்து அந்தார்.

தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை

மேலும் வேடசந்தூர்- ஒட்டன்சத்திரம் சாலையில் அமைந்துள்ள இந்த நூற்பாலைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தார் சோவனதாஸ். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த விடுதியின் உட்பகுதியில் உள்ள மரத்தில் அணிந்திருந்த சட்டையை கழுத்தில் மாட்டி தூக்கிட்டு தொங்கிய நிலையில் சோவனதாஸ் சடலமாக இருந்ததை கண்ட பிற வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக வேடசந்தூர் காவல்துறையினருக்கும் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

விசாரணை

இத்ததகவலறிந்த வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சட்டையில் எவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடியும் அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா சோவனதாஸ் என்கிற கோணத்தில் வேடசந்தூர் காவல்துறையினர் அந்த மில் நிர்வாகிகள் மற்றும் விடுதியில் தங்கியிருந்த வடமாநிலத் தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Odisha labour labour commits suicide near Dindigul today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X