'அதே பாணி..' திண்டுக்கல்லில் பயங்கரம்.. ஒரே நாளில் இருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இன்று ஒரே நாளில் இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்… பதற வைக்கும் பயங்கரம்… அச்சத்தில் மக்கள்

    தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரைப் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.

    தலை துண்டிப்பு

    தலை துண்டிப்பு

    இந்த 18 பேரில் முத்துபாண்டி, புறா மாடசாமி உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 14 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 5-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி காலணியைச் சேர்ந்த நிர்மலா தேவி என்பவர் மர்ம நபர்களால் இன்று காலை தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.

    திண்டுக்கல்

    திண்டுக்கல்

    திண்டுக்கல் இ.பி காலணி பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்றுகொண்டிருந்த நிர்மலா தேவியை, மர்ம நபர்கள் தலையைத் துண்டித்து எடுத்து நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வீசிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். தாடிக்கொம்பு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நிர்மலாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட எஸ்.பி சீனிவாசன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

    பழிக்குப்பழி

    பழிக்குப்பழி

    பசுபதி பாண்டியனிடம் செல்போனில் பேசி வீட்டைவிட்டு வெளியே வரவழைத்தது, மற்றும் அவரை கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது எனப் பசுபதி பாண்டியன் கொலைக்கு நிர்மலா தேவி உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்குப் பழிக்குப்பழி பட்டப்பகலில் தெருவில் நின்றுகொண்டிருந்த பெண் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், திண்டுக்கல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஒரே நாளில் 2 கொலை

    ஒரே நாளில் 2 கொலை

    இதனிடையே திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த ஸ்டீபன் என்ற இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை நடைபெற்ற கொலையைப் போலவே இதிலும் கொலை செய்யப்பட்டவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டு படுகொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல்லில் இன்று ஒரே நாளில் இரண்டு பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு கொலைகள் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+