"குறைஞ்ச விலைக்கு விப்பியா.." பழனியில் சாலையோர வியாபாரியை.. அத்துமீறி தாக்கிய கடை உரிமையாளர் கைது!
திண்டுக்கல்: பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்யும் நபரைக் கடைக்காரர் ஒருவர் மிரட்டி அடித்த வீடியோ வெளியான நிலையில், அத்துமீறித் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை வறுமையில் இருந்து காக்க இவர், சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்து வருகிறார்.
இதற்கிடையே இவரை அங்குக் கடை வைத்துள்ள ஒருவர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வீடியோ
ராஜன் பழனி நகர் காவல் நிலையம் அருகில் சாலையோரத்தில் செல்போன் கவர்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரைப் பழனி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை வைத்துள்ள சுதர்சன் என்பவர் மிரட்டி, தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதில், "செல்போன் கவரை நீ 50 ரூபாய்க்கு விற்பனை செஞ்சா நாங்கள் எல்லாம் என்ன செய்வது" என மிரட்டி கன்னத்தில் அறைகிறார்.

அத்துமீறித் தாக்குதல்
மேலும், இனிமேல் பழனியில் வியாபாரம் என்று எதாவது செய்தால் நீ இருக்கவே மாட்டாய் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நடைபாதை வியாபாரியை அடாவடியாகத் தாக்குவதை அந்த சுதர்சன் வீடியோவாகவும் எடுத்து, கடைக்காரர்கள் மட்டும் உள்ள வாட்சப் குழுவில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது குறித்து சாலையோர வியாபாரி ராஜன் கூறுகையில், "மதுரையில் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டு பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்று வருகிறேன்.

மிரட்டல்
நான் வேலை கேட்டுச் சென்ற போது, யாருமே எனக்கு வேலை தரத் தயாராக இல்லை. இதனால் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் செல்போன் கவர் வாங்கி விற்பனை செய்து வருகிறேன். ஆனால், ஒருவர் என்னிடம் வந்து செல்போன் கவர்களை விற்பனை செய்யக்கூடாது என்று மிரட்டினார்... அடித்தார். என்னை மாதிரி சாதாரண மக்களை யாரும் காப்பாற்ற முன் வரவில்லை..

விரட்டியடிப்பு
பிழைக்க வேறு வழியில்லாமல் தான், நடைபாதையில் செல்போன் கவர்களை விற்பனை செய்து வருகிறேன். ஆனால், அதைக் கூடச் செய்யக் கூடாது என்று பல கடைக்காரர்கள் விரட்டியடிக்கிறார்கள். பழனி முருகனை நம்பி வெளியூர், உள்ளூர் என வித்தியாசமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பெரும் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், கை வியாபாரிகள் மற்றும் வடநாட்டு வியாபாரிகள் பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

புரியவில்லை
அப்படியிருக்கும் போது குடும்ப வறுமை காரணமாகச் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்யும் என்னை மட்டும் கடைக்காரர்கள் அடிப்பது ஏன் என தெரியவில்லை" என்று அவர் கூறினார். நடைபாதை வியாபாரியைக் கடைக்காரர் பிடித்து அடிக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

கைது
இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே செல்போன் கவர் விற்பனை செய்த மதுரையைச் சேர்ந்த ராஜன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை தாக்கிய பழனியைச் சேர்ந்த சுதர்சன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுதர்சனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications