ரெண்டு நாள்ல அழுகிப் போற தக்காளியே இப்படினா? நாங்க சும்மா விடுவோமா? தலைசுற்ற வைக்கும் வெங்காய விலை.!
திண்டுக்கல்: திண்டுக்கல் வெங்காய சந்தையில் தக்காளியின் விலைக்கு நிகராக சின்ன வெங்காயத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்ற மாதம் 20 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம் தற்போது 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே தக்காளி விலை 100 ரூபாயை கடந்துள்ள நிலையில், வெங்காயமும் விலை உயர வாய்ப்புள்ளதாக மக்கள் கவலையடைந்துள்ளனர்.
தென் மாவடங்களிலேயே வெங்காயத்திற்கென தனி சந்தை இரு இடங்களில் பிரம்மாண்டமாக உள்ளது. திண்டுக்கல் வெங்காயத்திற்கு என்று தனி சந்தையானது திங்கள் ,புதன் ,வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் நடைபெறும்.

இந்தச் சந்தைக்கு திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தேனி, கம்பம் ,தாராபுரம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வெள்ளாமை ஆகக்கூடிய வெங்காயங்களை இந்தச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இங்கு வரக்கூடிய வெங்காயங்களை சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை,மதுரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கி செல்வர். சென்ற மாதம் 350 டன் சின்ன வெங்காயங்கள் வரக்கூடிய இடத்தில் வரத்து அதிகரித்து நாள் ஒன்றுக்கு 500 டன் சின்ன வெங்காயங்கள் வருகை தந்ததால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து பல பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மார்க்கெட் செயல்படும் 3 நாட்களில் ஒரு நாளைக்கு 25 லாரிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காயம் வந்திறங்கும். தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக வெங்காயம் பட்டறைகளில் இருப்பு வைக்க முடியவில்லை.
பயிரிடப்பட்ட வெங்காயமும் மழையால் சேதத்திற்குள்ளாகிவிட்டன. இதனால் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயங்கள் அனைத்தும் தற்போது விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு (திங்கள், புதன், வெள்ளி தினங்களில்) 25 லாரிகளில் வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு வந்து இறங்கியது. தற்போது அது 15 லாரிகளாக குறைந்துவிட்டது. ஆனால் தேவை எப்போதும்போல் குறையாமல் உள்ள நிலையில் வரத்து குறைவால் வெங்காயம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
ஆனால் தற்பொழுது பெய்த மழை காரணத்தால் சின்ன வெங்காயங்கள் சேதம் அடைந்து வரத்து குறைந்து 150 முதல் 200 டன் வெங்காயங்களே வரத்து ஆகி உள்ளதால் சென்ற மாதம் 20 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம் கிடுகிடு என விலை உயர்ந்து 50 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. மேலும் மழை சேதத்தால் வெங்காயங்கள் சேதமடைந்ததால், புது வெங்காயம் வரும்வரை வெங்காயங்களின் விலை குறைய வாய்ப்பு இல்லை.
மேலும் விலை உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணத்தால் தக்காளி செடிகள் சேதமடைந்து வரத்து குறைவால் தக்காளிகளின் விலை உயர்ந்து விற்பனையாகி வருவது போல் சின்ன வெங்காயங்களில் விலையும் தக்காளிக்கு நிகராக போட்டி போட்டு விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications