வண்டியை சித்தையன்கோட்டைக்கு விடுப்பா! பழசை மறக்காத ப.சிதம்பரம்! நெகிழ்ந்த கதர்ச்சட்டையினர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டைக்கு திடீர் விசிட் அடித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அங்கு மறைந்த காங்கிரஸ் பிரமுகர் அப்துல் காதர் குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரித்தார்.
ப.சிதம்பரம் அரசியலில் அடியெடுத்து வைத்தக் காலகட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் சித்தையன்கோட்டை அப்துல் காதர்.
பழசை மறக்காத ப.சிதம்பரம் தனக்கு கிடைத்த சிறிய நேரத்திற்குள் சித்தையன்கோட்டைக்கு சென்று துக்கம் விசாரித்ததோடு கதர்ச்சட்டையினரோடும் அரைமணி நேரம் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அப்துல் காதர்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சித்தையன் கோட்டை அப்துல் காதர் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் காலமானார். இந்த தகவல் டெல்லியில் இருந்த ப.சிதம்பரத்துக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து டெல்லியிலிருந்து உடனடியாக வர முடியாத சூழலால், அப்துல் காதர் மகனிடம் தொலைபேசி மூலம் பேசி ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார்.

திடீர் விசிட்
இந்நிலையில் ப.சிதமபரம் அலுவலகத்தில் இருந்து சித்தையன்கோட்டை அப்துல்காதர் குடும்பத்தினருக்கு தொடர்பு கொள்ளப்பட்டு ''தலைவர் உங்க வீட்டுக்கு துக்க விசாரிக்க வருகிறார்'' என்ற தகவல் தெரிவிக்கப்படிருக்கிறது. இதையடுத்து அங்கு சென்ற ப.சிதம்பரம் சுமார் அரைமணி நேரம் அமர்ந்து அப்துல் காதர் பற்றிய நினைவுகளை அவரது மகனிடம் பகிர்ந்துகொண்டார். பொதுவாக இது போன்ற துக்க விசாரிப்புகள் உட்பட எந்த நிகழ்வுக்கும் சென்றாலும் அதிகபட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டும் தான் ப.சிதம்பரம் அமர்வார்.

ப.சிதம்பரம்
சித்தையன்கோட்டை அப்துல் காதர் வீட்டில் மட்டும் தான் அரை மணி நேரம் அமர்ந்து துக்கம் விசாரித்துள்ளார். ஆரம்பக்காலங்களில் அப்துல் காதரின் கட்சி செயல்பாடுகள், நிர்வாக திறன், தனக்கும் அவருக்குமான நட்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி ப.சிதம்பரம் மனம் திறந்து பேசி நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். இதனிடையே ப.சிதம்பரத்தை கண்ட குஷியில் அவரது ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், நாற்காலி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று கூறி தரையில் அமர்ந்து கொண்ட நிகழ்வும் நடந்துள்ளது.

கட்சியினர் பிடிப்பு
காங்கிரஸ் கட்சியில் உள்ள மேல்மட்டத் தலைவர்கள் இது போன்று கட்சிக்காரர்கள் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் கலந்துகொண்டால் தான் கீழ்நிலை தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கட்சிப்பணிகளில் ஒரு பிடிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications