பழனி கோயில் நில மோசடி.. 5 தனிப்படைகளால் தேடப்பட்டு வந்த நபர்.. திடீரென போலீஸ் ஸ்டேஷனில் சரண்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோயில் நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக சுருட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த முக்கிய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த டீலிங்கை முடித்து கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவராக சொல்லப்படுவபவர்தான் ஜெயபிரகாஷ். நில விற்பனை விஷயங்களில் இடைத்தரகராக செயல்பட்ட இவரை 5 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

Palani Land Scam

வழக்கின் பின்னணி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு, தனி நபரால் 1.4 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை விற்கவோ, மற்ற தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது என்றும் மூல பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருந்தும் கூட இதற்கு முன்னர் பலமுறை இந்த நிலத்தை விற்பனை செய்ய பலரும் முயன்றனர். ஆனால், நீதிமன்றம் உறுதியாக தலையிட்டு நிலத்தை விற்பனை செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டது.

நிலைமை இப்படி இருந்தும் கூட.. சமீபத்தில் இந்த நிலம் இரண்டு தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விஷயம் அறிந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறை, நீதிமன்றத்தை நாடி விற்பனைக்கு தடை வாங்கியது.

நிலம் விற்பனை செய்யப்பட்டதே தனி கதை.. அதாவது நிலம் கை மாற்றப்பட்ட ஜூலை.6ம் தேதியன்று, திண்டுக்கல் பதிவாளர் விடுமுறையில் சென்றிருக்கிறார். அன்று ஒரு நாள் மட்டும் கொடைக்கானல் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர், திண்டுக்கல் பொறுப்பு பதிவாளராக வர.. அவர்தான் இந்த நிலத்தை மாற்றியிருக்கிறார்.

எனவே, பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள், இடைத்தரகர்கள் என 11 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதில் இடைத்தரகர் ஜெயபிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெயபிரகாஷ் இன்று மாலை நேரில் ஆஜராகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+