Palani Land Scam: பரபரப்பாகும் பழனி நில மோசடி வழக்கு.. ஜஸ்டின் மணிகண்டனை விசாரிக்கும் சிபிசிஐடி! அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலுக்கு வழங்கப்பட்ட பழனி தண்டபாணி சுவாமி கோவில் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், இடைத்தரகர் ஜெயபிரகாஷ் ஆகியோரை ஒரு நாள் சிபிசிஐ காவலில் விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Palani Land Scam CBCID Justin Manikandan Jayaprakash Palani Murugan Temple land Dindigul court sub registrar land fraud case Dindigul news

இந்த வழக்கில் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், மோசடியாக நிலம் வாங்கிய திருப்பூர் வெள்ளத்துரை, பழநி சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய நால்வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

பழனி நில மோசடி

இந்நிலையில் கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே ஜஸ்டின் மணிகண்டன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற சிபிசிஐடி போலீசார் 06.08.26 அன்று அவரை கைது செய்து திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், ஜஸ்டின் மணிகண்டனுக்கு ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஜஸ்டின் மணிகண்டன்

இதனை அடுத்து திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்று இரவு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின் மறுநாள் (07.08.26) திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்த திண்டுக்கல் நீதித்துறை நடுவர் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ஜஸ்டின் மணிகண்டனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு சென்றார்.

ஜெயபிரகாஷ்

அதே நிலையில் 07.08.26 அன்று தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து ஜஸ்டின் மணிகண்டன் உடல்நிலை மோசமானதால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அன்று (08.08.26) மதுரை மத்திய சிறையில் உடல்நிலை சரியில்லாமல் ஆன்வர்தீன் உயிரிழந்தார்.

ஜாமீன் மனு

இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சு வலி சம்பந்தமான மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த வாரம் ஜாமீன் கேட்டு முருகதாஸ், சேதுபதி, வெள்ளைதுறை தரப்பில் திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அனைவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை

கடந்த 10ஆம் தேதி ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில் இருவரும் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் ஜெயப்பிரகாசை 7 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க வேண்டும் என திண்டுக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து மதுரையில் இருந்து ஜெயப்பிரகாசம் ஜஸ்டின் மணிகண்டனும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஒரு நாள் விசாரணை

வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை முன்னெடுத்துச் செல்ல இஇருவரையும் சிபிசிஐடி காவலில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை நீதிபதி ஏற்றாலும் 7 நாள் விசாரிக்க அனுமதிக்க முடியாது எனவும், ஒரு நாளைக்கு மட்டும் விசாரிக்க அனுமதி தருவதாக கூறினார். அதன்படி இன்று மாலை 5:00 மணி வரை இருவரையும் விசாரிக்கலாம் எனவும் அதன் பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து சிபிசிஐடி போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+