Palani Land Scam: என்னென்ன பண்ணி வச்சுருக்காரோ! ஆக்ஷனில் பதிவுத் துறை! ஜஸ்டின் மணிகண்டனுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்
திண்டுக்கல்: பழனி கோயில் நில மோசடி வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் 6வது நாளாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடைபெற்றது. சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் கடந்த 27.07.26 முதல் 31.07.26 வரை 33 மணி நேரம் விசாரணை நடைபெற்று உள்ளது. இன்று 2 மணி வரை சேர்த்து 36 மணி நேரம் 30 நிமிடம் விசாரணை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியாற்றிய ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு தணிக்கை குழு தீவிர ஆய்வு நடத்தியுள்ளனர்.
பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நில மோசடி தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் போலி அறக்கட்டளை பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 15.07.2026 அன்று இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் கடந்த 17 தினங்களாக திண்டுக்கல் பழனி ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

பழனி நில மோசடி
இந்நிலையில் இவ் வழக்கு தொடர்பாக அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ் நிலத்தை விலக்கி வாங்கிய மடத்துக்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை பழனிபுதூரைச் சேர்ந்த சேதுபதி இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோர் 29.07.26 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 6 வது நாளாக இன்று 01.08.26 சிபிசிஐடி அலுவலகத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆஜரானார்.
ஜஸ்டின் மணிகண்டன்
அவரிடம் டிஎஸ்பி அஜய் தங்கம் விசாரணை மேற்கொண்டனர். இதுவரை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இடம் கடந்த (27.07.26 - 31.07.26) வரை 33 மணி நேரம் விசாரணை நடைபெற்று உள்ளது. தற்போது இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 2.00 மணி வரை 3 மணி நேரம் 30 நிமிடம் நடைபெற்றுள்ளது தொடர்ந்து நடைபெற்றது.
சார்பதிவாளர் அலுவலகம்
இது ஒருபுறம் இருக்க பழனி 100 கோடி ரூபாய் நில மோசடி விவகாரம் தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியாற்றிய ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு தணிக்கை குழு தீவிர ஆய்வு நடத்தியுள்ளனர். பத்திரப்பதிவு துறையின் சார்பில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த அனைத்து பத்திரங்களையும் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டது.
பதிவுத்துறை
இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்தில் கடந்த 2025 பிப்ரவரி மாதம் முதல் 2026 ஜூன் மாதம் வரை சுமார் 16 மாதங்கள் ஒன்றரை ஆண்டுகள் ஜஸ்டின் மணிகண்டன் ஒட்டன்சத்திரத்தில் சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட புரோக்கர் ஜெயபிரகாஷ் என்பவரின் வீட்டில் ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்தனர்.
சிறப்பு தணிக்கை குழு
இந்த நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை கண்டறிவதற்காக தற்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் பதியப்பட்ட அனைத்து பத்திரப்பதிவுகளை சிறப்பு தணிக்கை குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில் தான் பணியாற்றிய காலத்தில் ஜஸ்டின் மணிகண்டன் மேற்கொண்ட அனைத்து பத்திரப்பதிவுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கோவில் நிலங்கள் தனியார் நிலங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
