பழனி பகீர்..அரசு புறம்போக்கு நிலம் அபேஸ்! 7 நிமிட இடைவெளியில் பத்திரப்பதிவு..ஜஸ்டினின் ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பல கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 'சர்க்கார் புறம்போக்கு' நிலத்தைச் சாதுரியமாகக் குறைந்த மதிப்பில் காட்டி, சரியாக 7 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்துப் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ள ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

​திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான மட நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், அப்போதைய பழனி 1-ஆம் எண் இணை சார்பதிவாளர் (கூடுதல் பொறுப்பு) ஜஸ்டின் மணிகண்டன் பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டுச் சிபிசிஐடி விசாரணை வளையத்தில் உள்ளார்.

Palani land scam Government Land CBCID

​இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சரியாக 7 நிமிட இடைவெளியில் அரசு நிலத்தைத் தனியாருக்குப் கைமாற்றிப் பதிவு செய்து கொடுத்த மேலும் ஒரு பிரம்மாண்ட மோசடி ஆவணங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.

அரசு நிலம்

பழனி நகராட்சிக்கு உட்பட்ட பிரதான பகுதியான கவுண்டர் இட்டேரி ரோட்டில் (டவுன் சர்வே எண் 2/3, பிளாக் 49, வார்டு 4) உள்ள 55 செண்ட் நிலத்தின் சந்தை மதிப்புப் பல கோடி ரூபாயைத் தாண்டும். ஆனால், இந்த அரசு நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பை மிகக் குறைவாகக் கணக்கிட்டு, ரூ. 2,67,36,000 (இரண்டு கோடியே 67 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்) எனக் குறைந்த மதிப்பீடு செய்து பத்திரத்தில் காட்டியுள்ளனர்.

அதே ஜூலை 06

பழனி 100 கோடி ரூபாய் கோயில் நிலத்தைச் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதே ஜூலை 06, 2026 அன்றைய ஒரே நாளில், இந்த அரசு நிலப் பத்திரத்தையும் அவர் அவசர அவசரமாகப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

'7 நிமிட' இடைவெளியில் பத்திரப்பதிவு

நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது மகன் மனோஜ்குமாருக்குக் கடந்த மே 20-இல் எழுதி வைத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ஜூலை 06 அன்று பழனி சார்பதிவகத்தில் தாக்கல் செய்கிறார். மே 20-ஆம் தேதியிட்ட செட்டில்மெண்ட் பத்திரம் பழனி சார்பதிவகத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆவண எண் 1437/2026 ஆகப் பதிவு செய்யப்படுகிறது. முதல் பத்திரம் பதியப்பட்ட அடுத்த 7 நிமிடங்களிலேயே, அந்த நிலத்தைச் சௌந்திரபாண்டியன் என்பவருக்கு ரூ.20 லட்சத்திற்குக் கிரையம் செய்வதாகக் கிரைய உடன்படிக்கைப் பத்திரமும் ஆவண எண் 1438/2026 ஆகப் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

புறம்போக்கு நிலம்

வருவாய்த்துறையின் அதிகாரப்பூர்வ நகரளவு நிலப் பதிவேட்டின்படி (Town Survey Land Register - TSLR), சர்வே எண் 2/3-ல் உள்ள இந்த நிலம் தெளிவான 'சர்க்கார் புறம்போக்கு' (Govt Promboke) நிலமாகும். ​அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்திற்கு, எந்தவொரு தகுந்த வில்லங்க ஆய்வும் செய்யாமல், பல கோடி மதிப்பிலான நிலத்தைக் குறைந்த மதிப்பில் காட்டி, வெறும் 7 நிமிட இடைவெளியில் செட்டில்மெண்ட் மற்றும் கிரைய உடன்படிக்கைப் பத்திரங்களை ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்து கொடுத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜஸ்டின் மணிகண்டன்

​100 கோடி கோயில் நிலத்தைப் பதிவு செய்த அதே ஜூலை 6-ஆம் நாளில், பல கோடி மதிப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தையும் 7 நிமிடங்களில் பதிவு செய்து கொடுத்துள்ள ஆவணங்கள் வெளியாகி இருப்பதால், சிபிசிஐடி விசாரணையில் சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டுகளும் பிடியும் மேலும் இறுகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+