பழனி முருகன் கோயிலில் சிலிர்க்க வைத்த பக்தர்கள்.. உண்டியலில் அள்ள அள்ள தங்கம்.. குவிந்த கோடிகள்
திண்டுக்கல் : அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு உண்டியல் மூலம் ரூ.3¾ கோடி காணிக்கை கிடைத்திருக்கிறது.
உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முக்கியமானது பழனி முருகன் கோயில் தான். இந்த கோயிலுக்கு சபரிமலைக்கு வந்து செல்லும் பல பக்தர்கள் அப்படியே பழனிக்கு வந்து செல்கிறார்கள். பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் நிலவியது.
இந்நிலையில் பழனி மலை முருகன் கோயிலில் ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெறும். அந்த வகையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 2 நாட்களாக காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் உண்டியலை எண்ணும் பணி நடந்தது.
நேற்று முன்தினம் நடைபெற்ற உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 68 லட்சத்து 11 ஆயிரத்து 653 கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 687 செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர தங்க பொருட்கள் 651 கிராம், வெள்ளி பொருட்கள் என 12 கிலோ (12,525) கிராம் ஆகியவை காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பபட்டள்ளது.
இந்தநிலையில் செவ்வாய்கிழமையான நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. அதில் ரூ.1 கோடியே 16 லட்சத்து ஆயிரத்து 15 கிடைத்தது. அதேபோல் தங்கம் 45 கிராம், வெள்ளி 2¼ கிலோ (2358), வெளிநாட்டு கரன்சிகள் 193-ம் கிடைத்தன.
அதன்படி கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையின் மூலம் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.3 கோடியே 84 லட்சத்து 12 ஆயிரத்து 668 காணிக்கையாக கிடைத்துள்ளது தங்கம் 696 கிராம், வெள்ளி 14¾ கிலோ (14,883), வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 880-ம் கிடைத்திருக்கிறது.
தைபூசம் நெருங்கும் நிலையில் பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழனி-திண்டுக்கல் சாலை, பழனி -கோவை சாலை, பழனி-தாராபுரம் சாலையில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. தை பொங்கலுக்கு முன் முருகனை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் வந்து கொண்டே இருக்கிறார்கள். தை பூசம் அன்று பழனியில் பல லட்சம் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications