பழனிக்கு போகும் பக்தர்களே.. உங்களுக்கு முக்கிய அறிவிப்பு! ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு ரத்து!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு முருகனின் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை இன்று முதல் 40 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், 40 நாட்களுக்கு பின் உரிய ஆய்வுக்குப் பின் ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புரவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். யானை பாதை படிப்பாதை வழியாக கால்நடையாகவும் மின் இழுவை ரயில் வழியாக சுமார் பத்து நிமிடத்திலும் மலைக் கோவிலுக்கு செல்லலாம். ஆனால் பெரும்பான்மையான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு எளிதில் சென்று வர ரோப் கார் சேவையை விரும்புகின்றனர். ரோப் கார் மூலம் மூன்று நிமிடத்தில் மலைக் கோயிலுக்கு சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்தரத்தில் பயணித்தவாறு பழனி மற்றும் கொடைக்கானல் மலைகளின் அழகை ரசித்தவாறும் வயல்வெளிகளை பார்த்தவாறு பயணிப்பது பக்தர்களுக்கு புது புத்துணர்ச்சியை கொடுக்கும். இதனால் பண்டிகைக் காலங்கள் மட்டுமல்லாது, சாதாரண நாட்களில் கூட ரோப் கார் மையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். இந்நிலையில் ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு ரோப் கார் சேவை இன்று (07.10.2024) முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரோப் காரில் மேல் தளத்தில் புதிய சாஃப்ட்டுகள், புதிய கம்பி வடம் ,உருளைகள் ,பெட்டிகள் பொருத்தபட்டு பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்ற பின்னர் ஐஐடி வல்லுனர் குழு ஆய்வு செய்த பிறகு ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகள் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், பக்தர்கள் படிப்பாதை , யானை பாதை ,மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அறிவித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications