பழனி கோவிலுக்கு போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி ‘இந்த’ வழியில் போக முடியாது மக்களே!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு முருகனின் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், 31 நாட்களுக்கு பின் உரிய ஆய்வுக்குப் பின் ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலுருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். யானை பாதை படிப்பாதை வழியாக கால்நடையாகவும் மின் இழுவை ரயில் வழியாக சுமார் பத்து நிமிடத்திலும் மலைக் கோவிலுக்கு செல்லலாம். ஆனால் பெரும்பான்மையான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு எளிதில் சென்று வர ரோப் கார் சேவையை விரும்புகின்றனர். ரோப் கார் மூலம் மூன்று நிமிடத்தில் மலைக் கோயிலுக்கு சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்தரத்தில் பயணித்தவாறு பழனி மற்றும் கொடைக்கானல் மலைகளின் அழகை ரசித்தவாறும் வயல்வெளிகளை பார்த்தவாறு பயணிப்பது பக்தர்களுக்கு புது புத்துணர்ச்சியை கொடுக்கும். இதனால் பண்டிகைக் காலங்கள் மட்டுமல்லாது, சாதாரண நாட்களில் கூட ரோப் கார் மையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு ரோப் கார் சேவை வரும் 15ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரோப் காரில் மேல் தளத்தில் புதிய சாஃப்ட்டுகள், புதிய கம்பி வடம் ,உருளைகள் ,பெட்டிகள் பொருத்தபட்டு பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்ற பின்னர் வல்லுனர் குழு ஆய்வு செய்த பிறகு ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகள் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், பக்தர்கள் படிப்பாதை , யானை பாதை ,மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அறிவித்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications