சுறுசுறுப்பான சிபிசிஐடி.. அடுத்த லெவலுக்குப் போன பழனி கோவில் நில மோசடி வழக்கு! 4 பேருக்கு கஸ்டடி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கு மோசடி பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 4 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளது.

பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நில மோசடி தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Palani Temple Land Scam

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 15.07.2026 அன்று இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பழனி கோவில்

இவ்விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளான நிலையில், தென்மண்டல எஸ்பி சாஜிதா நேரடியாக வருகை தந்து, கோயில் செயல் அலுவலர் கணபதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். இவ்வழக்கு தொடர்பாக, கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி, அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகியோரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு, 1880-ஆம் ஆண்டு முதலாக உள்ள ஆவணங்கள் பெறப்பட்டன.

நில மோசடி

இந்த வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் என சொன்ன முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரைச் சேர்ந்த சேதுபதி பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்ருதீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜஸ்டின் மணிகண்டன்

இவ்வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் முன்ஜாமீன் பெற்றுள்ளார். அந்த ஜாமீன் இன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் கைதாகலாம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே இவ்வழக்கில் தொடர்புடைய அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை - சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோரை கடந்த 29ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர்.

சிபிசிஐடி காவல்

4 பேரையும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை அடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 4 பேரும் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

முக்கிய புள்ளிகள்

பின் திண்டுக்கல் நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதனையடுத்து 4 பேரையும் இன்று மதியம் முதல் வெள்ளி மதியம் வரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நிபந்தனையுடன் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்களை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின் இவ்வழக்கில் மேல் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+