வேலாக நின்ற வேலவா.. தொடங்கியது பழனி தைப்பூச விழா! அரோகரா கோஷம் விண்ணதிர நடைபெற்ற கொடியேற்றம்!
திண்டுக்கல்: உலகப் புகழ்பெற்ற அருள்மிகு பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்ச்சி வரும் 10ஆம் தேதியும், தைப்பூச தேரோட்டம் நிகழ்ச்சி 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

இந்நிலையில் தற்போது தைப் பூச விழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளது. இதனையடுத்து, மதுரை, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் கம்பம், வத்தலகுண்டு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் செம்பட்டி வழியாக பாதயாத்திரையாக சென்று கொண்டு உள்ளனர்.
இதேபோல், நத்தம் வழியாக, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையைச் சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். மேலும், திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, கணவாய்பட்டி, கூம்பூர், ஊதியூர், குமரலிங்கம் உள்பட 14 இடங்களில் மின்சாரம், கழிப்பிடம், குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் தங்கும்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் சேவல், மயில் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் பிப்ரவரி 10ம் தேதி மாலையும், தொடர்ந்து இரவு வெள்ளித்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. ஏழாம் நாள் திருவிழாவான 11ம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் தங்கும் அறைகள், குடிநீர், கழிவறை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோவில் நிர்வாகமும் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பழனி தைப்பூசத்தை ஒட்டி மலை கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் யானை பாதை வழியாக மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. படிப்பாதை வழியாக பக்தர்கள் கீழே இறங்குகின்றனர். மலைகோவிலுக்கு செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரோப் கார் நிலையம், மின் இழுவை ரயில் நிலையம், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்ட பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி கோவில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மலைக்கோவிலுக்கு செல்லும் வழிகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் தைப் பூசத்தன்று மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications