கணவருடன் மனக் கசப்பு.. கடைசி வரை பேசாமல்.. தூக்கில் தொங்கிய ஊராட்சி பெண் தலைவர்!
திண்டுக்கல் ஊராட்சி பெண் தலைவர் தற்கொலை செய்து கொண்டார்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பெண் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டி மகாராஜா நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார்.. இவரது மனைவி இந்திரா.. இவருக்கு 37 வயதாகிறது.. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சத்திரப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் பிரவீன்குமார்.. ஆனால் குழந்தைகள் படிப்புக்காக திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பழனி அடுத்துள்ள சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியாக வெற்றி பெற்றவர் இந்திரா..
அதனால் தன் பணி நிமித்தமாக சத்திரப்பட்டிக்கு அடிக்கடி சென்று வந்தார்.. இதுதான் கணவன் மனைவி இடையே தகராறாக வெடித்துள்ளது.. குடும்பத்தை கவனிக்க திண்டுக்கல்லுக்கும், ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்க சத்திரப்பட்டிக்கும் சென்று வருவது கணவருக்கு பிடிக்கவில்லை என்பதால் தகராறு தினந்தோறும் வெடித்து வந்துள்ளது.
அதனால் கணவருடன் பேசாமலேயே இருந்து வந்துள்ளார் இந்திரா.. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவி இந்திரா மனம் உளைச்சலால் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தாடிகொம்பு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications