பட்டா மாறுதல்.. போலி பத்திரங்கள்.. திண்டுக்கல் சார் பதிவாளர் பண்ண வேலை பாருங்க.. அதிரும் பதிவுத்துறை
திண்டுக்கல்: திண்டுக்கல் நிலக்கோட்டையில் என்ன நடந்துக்குன்னு பார்த்தீங்களா? மொத்தம் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதேசமயம், நிறைய முறைகேடுகளும் நடந்து வருகின்றன.. அதாவது, நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது என்பதால், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் நடக்கிறது.

சார் பதிவாளர்: ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
ஆனால், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
போலி பத்திரம்: போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளரே தானாக முன்வந்தோ, அல்லது யாரிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையிலோ, ஏன் அந்த பத்திர பதிவை ரத்து செய்யக்கூடாது? என்பதற்காக காரணத்தை கேட்டு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அதுமட்டுமல்ல, அந்த பத்திரத்தை எழுதிக்கொடுத்தவர், பத்திரத்தின் அனைத்து தரப்பினர், தொடர்ச்சி ஆவணம் இருந்தால் அதன் தரப்பினர், பத்திரம் ரத்து செய்யப்பட்டால், அதனால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கு இந்த அறிவிப்பை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
மோசடிகள்: இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த பிறகும்கூட, இந்த மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதிலும் இதில் முக்கிய அதிகாரிகளே சிக்கி வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில்கூட, வாணியம்பாடி சார் பதிவாளர் மீது புகார் பதிவானது.. அதேபோல, குடியாத்தம் விஏஓ ஜெயமுருகன், ஏழை விவசாயியிடம் பட்டா மாற்ற லஞ்சம் கேட்டிருக்கிறார்..
இதோ இப்போதும் ஒரு புகார் பதிவாகி உள்ளது.. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எம்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜன்.. 48 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி.
விவசாய நிலம்: தன்னுடைய விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக மாவட்ட எஸ்பி பிரதீப்பிடம் புகார் மனு அளித்தார். இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இதுகுறித்து குற்றப்பிரிவு எஸ்ஐ செல்வராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்..
அப்போது, தங்கராஜனுக்கு சொந்தமான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அய்யம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி: இதையடுத்து போலீசார் சார்பதிவாளர் பாலமுருகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி ஆவணங்கள் தொடர்பாக, சார்பதிவாளர்களே இப்படி சிக்கி வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications