பிரதமர் மோடி நவ.11-ல் தமிழகம் வருகை! காந்தி கிராம விழாவில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி பங்கேற்பு!
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 11-ந் தேதி தமிழகம் வருகை தருகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அக்டோபர் 30-ந் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவார் எனக் கூறப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி வருகை தொடர்பான பொய்யான தகவல்கள் பரவியது.

நவ.11-ல் வருகை
இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 11-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரும் பங்கேற்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை டூ காந்தி கிராமம்
அதேநேரத்தில் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. காந்தி கிராம பல்கலைக் கழகத்துக்கு நேரில் சென்று தொடர்ச்சியான ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் விசாகன் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடி மதுரைக்கு தனி விமானம் மூலம் வருகை தருகிறார். பின்னர் அங்கிருந்து காந்தி கிராம பல்கலைக் கழகத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகிறார். இதற்காக காந்தி கிராமத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு தீவிரம்
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதன்கிழமை முதல் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் காந்தி கிராமம் கொண்டுவரப்படுகிறது. மத்திய படையினர் பாதுகாப்பு அல்லாமல் சுமார் 4,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பாஜகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திமுகவினர் ஏற்பாடு
பிரதமர் மோடியுடன் விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூரில் இருந்து காந்தி கிராமம் செல்ல இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கரூர்-மதுரை பைபாஸில் தோமையார்புரம் முதல் காந்தி கிராமம் நுழைவு வாயில் வரை பிரம்மாண்டமான வரவேற்புக்கு திமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications