செல்போனில் வக்கிரம்.. அருள்செல்வம் செய்த அற்பத்தனமான வேலை! கொதித்த மாணவிகள்! திகுதிகு திண்டுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றசாட்டில் அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளை மட்டுமல்லாது உடன் பணியாற்றும் சக பேராசிரியைகளையும் ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாகவும் பகீர் புகார் எழுந்துள்ள நிலையில், அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர் மாணவிகள்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் குறிப்பாக சிறுமியர்களுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளத்தக்க வகையில் இருக்கிறது.
குறிப்பாக பள்ளி கல்லூரிகளில், ஆசிரியர்கள், பணியாளர்களால் சிறுவர்- சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதும் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் சம்பவம், திருச்சி என்ஐடி சம்பவம், நாமக்கல் பள்ளி சம்பவம், வால்பாறை அரசு கல்லூரி சம்பவம் என கடந்த சில நாட்களில் பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அருள்செல்வம் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது கடந்த 4 நாள்களுக்கு முன் மாணவிகளையும் பெண் பேராசிரியைகளையும் தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் இணைந்து காவல் துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்காவுக்கு புகார் அளித்தனர்.
மேலும் முதல்வரின் தனிப் பிரிவு மாவட்ட நிர்வாகம் மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஆகியோருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து எரியோடு போலீசார் மற்றும் மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் குணசேகரன் ஆகியோர் புகார் அளித்த மாணவிகள், பெண் பேராசிரியைகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அனைவரும் பேராசிரியர் அருள்செல்வம் மீதான புகார்களை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து விசாரணையின் முடிவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கீதா புகாரில் சிக்கிய பேராசிரியர் அருள் செல்வத்தை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், கல்லூரியில் தொடர்ச்சியாக பெண் பேராசிரியைகள் ஐந்து பேர் சேர்ந்து கொண்டு தமிழ் பேராசிரியர்கள் மீது பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாணவிகளை வைத்து புகார் அளிப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே கல்லூரியில் பணியாற்றிய தமிழ் பேராசிரியர் பாலா என்பவர் மீதும் இதே பலியல் புகார் அளிக்கப்பட்டது. சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது அதே துறையில் பணியாற்றும் பேராசிரியர் அருள்செல்வம் மீதும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே பெண் பேராசிரியர் மாணவிகளை தூண்டி போலி புகார் அளிக்க வைப்பதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, போலி புகார் அளித்துள்ளார் என்பது உறுதியானால் அவர்கள் மீது பணி நீக்கம் அல்லது வேறு இடத்திற்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
முருகா எல்லாம் உனக்குத் தான்.. பழனி கோவிலில் கொட்டிக் கிடந்த தங்கம்! அள்ள அள்ள குறையாத வெள்ளி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications