நாமக்கல்லின் பல ஆண்டு கனவு.. சேலம்-திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு 2,241 கோடி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: அண்மையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் புதிதாக 5 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட்டிருந்தது. இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.10 ஆயிரத்து 21 கோடி ஆகும். இந்த நிலையில், ரயில் பாதை திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் சேலம்-திண்டுக்கல் இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு ரூ.2,241 கோடி ஒதுக்கீடு செய்ய ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பாதை செயல்பாட்டிற்கு வந்தால், சென்னை மற்றும் பெங்களூருவிலிருந்து தென் தமிழகத்தை இணைக்கும் ஒரு மிக முக்கியமான மாற்றுப் பாதையாக இருக்கும்.

அண்மையில் மத்திய அமைச்சரவை கூடி, பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் அளித்தனர். அதனடிப்படையில், தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு அரக்கோணம்-ரேணிகுண்டா இடையிலான 3 மற்றும் 4-வது ரயில் பாதை 77 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்க ரூ.1,936 கோடியும், ஒசூர்-ஓமலூர் இடையே 147 கிலோ மீட்டர் தொலைவுக்கு சரக்கு ரயில் பாதை அமைக்க சுமார் ரூ.2,042 கோடியும் ஒதுக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Rs 2 241 crore allocated for Salem-Dindigul double railway line project Good news from the Railway Board

அதேபோல் சேலம் - கரூர் - திண்டுக்கல் இடையே 159 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க ரூ.2,241.67 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்கனவே ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் தற்போது, சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை அமைக்க ரூ.2,241 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதில், ரூ.1,580 கோடியானது கட்டுமானப் பணிகளுக்காகவும், ரூ.281.78 கோடி தொலைத் தொடர்பு பணிகளுக்காகவும், ரூ.379.56 கோடி மின்சார இணைப்புகள் உள்ளிட்ட பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

சேலம், நாமக்கல், கரூர் வழியாக வரும் திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் 18 பெரிய பாலங்கள், 241 சிறிய பாலங்கள் உள்ளன. அதனை மேம்படுத்தி இரட்டை பாதை அமைக்கப்பட இருக்கிறது. இந்த பாதையில் தான் புதிய ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இது தற்போது ஒற்றைப் பாதையாக இருப்பதால் ரயில்களை கடக்க வைக்க ரயில்களை ஆங்காங்கே ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்க வேண்டி உள்ளது.

அதேபோல் சரக்கு ரயில் போக்குவரத்தும் மேம்படும். சேலம், நாமக்கல் கரூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களுமே மிகவும் தொழில்துறை மாவட்டங்கள் ஆகும். எனவே சரக்கு போக்குவரத்து அதிகமாக நடக்கும். பயணிகள் போக்குவரத்தும் லாபகரமாக இருக்கும் என்பதால் மத்திய அரசு பச்சைக்கொடி ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் சென்னை, பெங்களூருக்கு இந்த வழித்தடம் முக்கிய வழித்தடமாக இருக்க போகிறது என்பதாலும் இதன் அவசியம் உணர்ந்தே அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த சேலம் திண்டுக்கல் (நாமக்கல் வழியாக) ரயில் பாதை எனப்து 2013ல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது, நாமக்கல் வழியாக, ஐந்து தினசரி ரயில்கள் உட்பட வாரத்திற்கு, 50 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடம் முன்பு சேலம் ஈரோடு, கரூர் வழியாக இருந்தது. நாமக்கல் மாவட்டம் தான் ரயில் வசதி இல்லாத மாவட்டமாக இருந்தது. பல ஆண்டு கோரிக்கையை மத்திய அரசு கடந்த 2013ல் நிறைவேற்றியது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சேலம் - கரூர் புதிய அகல ரயில்பாதை அமைக்கும்போதே, இருவழிப்பாதைக்கு தேவையான அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. மேலும், மோகனுார் - வாங்கல் இடையே காவிரி ஆற்றில், இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில், ஏற்கனவே, ஆற்றில் பில்லர் போட்டு, கான்கிரீட் தளம் போடப்பட்டு விட்டது. எனவே பல்வேறு சவால்கள் மிக குறைவாகவே உள்ளதால் 2029-30ல் இந்த திட்டத்தை முடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+