Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்ன பசங்க கூட சேர்ந்து..தரம் தாழ்ந்து போன சீனியர் செங்கோட்டையன்! பீலிங்குடன் பேசிய திண்டுக்கல்லார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: அதிமுகவில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் நான்காவது ஐந்தாவது இடத்தில் இருப்பதாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன். மேலும் எம்ஜிஅர் உடன் நின்ற அவ்வளவு பெரிய மனிதர் விஜய்க்கு பட்டம் கொடுக்கும் அளவுக்கு கீழ்த்தரமாக போய்விட்டார் எனவும் கூறியுள்ளார்.

திண்டுக்கல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுக சார்பில் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. இதில் முன்னாள் மேயர், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது," 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக எங்களது கூட்டணியில் உள்ள பாஜக அதிகரித்ததை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைக் கண்டித்து 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Dindigul Srinivasan Sengottaiyan aiadmk

திண்டுக்கல் சீனிவாசன்

திமுக கூட்டணி பலமாக உள்ளது என கூறிய நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி டெல்லி தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. திமுக கூட்டணி பலம் இல்லாமல் உள்ளது. தோல்வி அடைவது நிச்சயம். கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்குவது பற்றி தலைமை அறிவிக்கும் போது தான் தெரியும். அனைத்தும் ரகசியம் தான் வெளியே சொல்ல முடியாது. ஸ்டாலின் உடன் இருப்பவர் இதை பற்றி கூறுவாரா? அனைத்தும் முடிவான பின்பே தெரியும்.

அதிமுக அரசியல்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உட்பட ஊராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் என அனைத்து அலுவலரும் போராட்டம் நடத்துகின்றனர். திமுகவின் மோசமான ஆட்சிக்கு போராட்டங்களே அடையாளம். ஜாக்டோ ஜியோ பாராட்டு கூட்டங்கள் எல்லாம் நடைபெற்றது ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்தும் ஏமாற்று வேலை, அனைத்தும் பொய் அதற்குரிய விளக்கங்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சி வந்த உடன் அவர்களுக்கு தேவையான நன்மைகள் செய்வோம்.

திமுக ஆட்சி

போராட்டங்களால் மாணவர்கள் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. துப்புரவு பணியாளர்களை கைது செய்தனர் பின் காலை உணவு வழங்கி வருகின்றனர். நான்கு வருடம் பத்து மாதத்திற்கு பின்பு அனைத்து மந்திரியும் செயல்படுகின்றனர். அனைத்தையும் சரி செய்தது போன்று ஏமாற்று வேலையை திமுக செய்து வருகிறது. உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திமுகவின் திட்டம் உள்ளது. இந்த ஆட்சி போக வேண்டும், ஒழிய வேண்டும், அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதை கனவாக கொண்டுள்ளனர்.

அதிமுக பாஜக கூட்டணி

அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமையுமா? என்ற கேட்கிறீர்கள். இப்போது தான் நிச்சயம் செய்து உள்ளோம், இனி தாலி கட்ட வேண்டும், குடும்பம் நடத்த வேண்டும், பத்து மாதங்கள் பின்பே குழந்தை பிறக்கும் இப்பவே பெயர் வைக்க சொன்னால் எப்படி முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி இருந்தால் கூட அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிக பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிச்சாமி நூறுமுறை கூறிவிட்டார். இதையே நாங்களும் கூறுகிறோம். எங்களது கூட்டணி கட்சி பிஜேபி.

விஜய் அரசியல்

எங்களுக்கு வந்துள்ள கருத்துக்கணிப்பு படி 60% வாக்கு வாக்கு வங்கி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணிக்கு வந்து விட்டார்கள். 60 பெரியதா 50 பெரியதா என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். த.வெ.க செங்கோட்டையன் பாஜக கூட்டணியில் அதிமுக ஒரு அங்கம் எனக் கூறியுள்ளார். அகில இந்திய கட்சி பாஜக அவர்களே அதிமுக தலைமையில் இருக்கிறோம் என கூறிவிட்டனர். பெரிய மனிதர் அவ்வாறு சொன்னால் நாங்கள் என்ன செய்வது. உண்மையா பொய்யா என தெரியவில்லை. செய்தியில் வந்தது ஜெகன்மோகன் ரெட்டியிடம் விஜய் பேசியுள்ளார். உன்னுடைய எதிரி திமுக தானே அதை மட்டும் பேசு மத்திய அரசாங்கத்தை ஏன் இழுக்கிறாய் அனுபவத்தில் சொன்னதாக வந்துள்ளது.

செங்கோட்டையன்

செங்கோட்டையன் விஜய்க்கு புரட்சி தளபதி பட்டம் கொடுத்துள்ளார். இதை நினைத்து கண்ணீர் விட தான் வேண்டும். எங்களுடன் இருந்த பெரிய மனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டார். செங்கோட்டையன் அவர்களுக்கு என தனியாக தகுதிகள் உள்ளது. சின்ன சின்ன தாளத்தில் அடிப்பார்கள், ஆனால் அண்ணன் செங்கோட்டையன் தாம்பலத்தில் டம் டம் என்று அடித்து வருகிறார். அப்போதும் செங்கோட்டையனை நாலாவது அல்லது ஐந்தாவது இடத்திலேயே உட்கார வைத்துள்ளனர். எங்களுடன் முதலிடத்தில் இருந்தார். கண்ணீர் வடிக்கின்றோம் எங்களுக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது என்று. அவரது நிலை தாழ்ந்து விட்டது." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+