செப்டிக் டேங்கில் கோடி கோடியாய் பணம்! ஆசையோடு சுற்றி வந்த பப்ளிக்! தோண்டிய போலீஸுக்கு ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம், காசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அருகே FQL,VG ஆன்லைன் செயலி வழியாக பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.30 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக காவல்துறையினர் ஏஜெண்டுகள் 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில் ஏஜென்ட் ரமேஷ் வீட்டில் செப்டிக் டேங்கில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த செப்டிக்டேங்க்கை தோண்டிப் பார்த்துள்ளனர் போலீசார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிரிப்டோ கரன்சி (Crypto Currency Trading) வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாக சிலர் கூறியுள்ளனர்.

scam cryptocurrency crime

அவ்வாறு இதில் முதலீடு செய்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிப்டோ மோசடி

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலையச் சரகம் காசம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அளித்த புகாரில், FQL Exchange மற்றும் VG Investment ஆகிய போலி செயலிகள் மூலம் ரூ. 50,000 முதலீடு செய்தால் இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மோசடி

நத்தம், காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மற்றும் விவசாய பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ. 30 கோடிக்கும் மேல் இந்த கும்பல் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

3 பேர் கைது

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் குமரேசன் மேற்பார்வையில் ஆய்வாளர் குற்றப்பிரிவு காவல் முத்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார், இம்மோசடி வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காசம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி அனிதா, மற்றும் விஜய் ஆகிய 3 பேரையும் போலீசார் உடனடியாகக் கைது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செப்டிக் டேங்கில் பணம்

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தீனதயாளன், பிரியதர்ஷினி, ரஞ்சித் மற்றும் அருண் உள்ளிட்ட பிற ஏஜெண்ட்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஏஜென்ட் ரமேஷ் வீட்டில் செப்டிக் டேங்கில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதோடு ஏஜென்ட்களின் வீடுகளை சுற்றி வந்துள்ளனர்.

நத்தம் போலீஸ்

அது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கில் அந்த செட்டிங் டேங்குக்குள் பணம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அதிக அளவில் மக்கள் கூடியதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானது. இதை அடுத்து அங்கு வந்த நத்தம் காவல் நிலைய போலீசார் பொதுமக்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் முன்னிலையில் செப்டிக் டேங்கை தோண்டினர்.

கிரிப்டோ கரன்சி மோசடி

ஆனால் செப்டிக் டேங்கில் துர்நாற்றத்துடன் கல், மணல் மட்டுமே இருந்தது. இதனால் பணம் கிடைக்கும் என அங்கு ஆசையோடு வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இந்த கிரிப்டோ கரன்சி மோசடி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுவரை 10,000 மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மோசடித்தொகை ஆயிரம் கோடியை தாண்டும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+