பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு.. மூடிமறைத்த நிர்வாகம்? விஜய், வன்னி அரசு எங்கே?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலை அதிகாரிகளுக்கோ போலீசாருக்கோ தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகம் மறைக்க முயன்றதாகக் கூறி, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் மௌனம் காப்பதும் சர்ச்சையாகி உள்ளது.

Dindigul Palani

காலாண்டு விடுமுறைக்கு பின் திறக்கப்பட்ட பள்ளி

பழனி அருகே இருக்கும் மானூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு சுமார் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை பள்ளி வழக்கம்போல் மீண்டும் திறக்கப்பட்டது. அன்றைய தினம் காலை, குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக சமையல் பணியாளர்கள் பள்ளிக்கு வந்தனர்.

தண்ணீர் தொட்டியில் காத்திருந்த பேரதிர்ச்சி

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து, சமையல் வேலைகளைத் தொடங்க பணியாளர்கள் சென்றபோது, தண்ணீர் தொட்டியின் குழாய் சேதமடைந்து உடைந்து கிடப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். உடனடியாக பள்ளி ஆசிரியர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் மூடியைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் உள்ளே மனிதக் கழிவு மிதப்பதைக் கண்டு ஆசிரியர்களும் ஊழியர்களும் சொல்லொணா அதிர்ச்சியில் உறைந்துபோயினர். பள்ளி விடுமுறையில் இருந்த 10 நாட்களில், மர்ம நபர்கள் சிலர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து இந்த அருவருக்கத்தக்க ஈனச்செயலைச் செய்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.

உடனடியாக சுத்தம் செய்து மூடிமறைக்கப்பட்டதா?

மாணவர்கள் குடிக்கும் நீரில் மலம் கலக்கப்பட்டிருப்பது தெரிந்ததும், உடனடியாக அந்த தொட்டியில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் பணியாளர்களை வைத்து தொட்டி முழுவதும் அவசர அவசரமாகக் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

ஆனால், இவ்வளவு பெரிய மற்றும் ஆபத்தான குற்றம் நடந்தும், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் இதுகுறித்து காவல் நிலையத்திலோ அல்லது பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளிடமோ முறையான புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்சனை பெரிதாகும் என்ற நோக்கில், யாருக்கும் தகவல் தராமல் இந்த விவகாரத்தை பள்ளி அளவிலேயே மூடிமறைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இரண்டு நாட்களுக்குப் பின் வெடித்த விவகாரம்: பெற்றோர் முற்றுகை

இந்த விவகாரம் இரண்டு நாட்களாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை அன்று எப்படியோ கிராம மக்களுக்கும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கசிந்தது. குழந்தைகள் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த கொடூரத்தை அறிந்து பெற்றோர் கொந்தளித்துப் போயினர்.

"குழந்தைகளின் உயிருடன் விளையாடும் வகையில் இப்படி ஒரு அக்கிரமம் நடந்துள்ளது. இதை எங்களுக்குச் சொல்லாமல், போலீசில் புகார் தராமல் எப்படி மறைக்கலாம்?" என்று ஆத்திரமடைந்த கிராம மக்களும் பெற்றோர்களும் பள்ளிக்குத் திரண்டு வந்தனர். தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களம்போல பதற்றமானது.

போலீசார் தீவிர விசாரணை

பெற்றோர்கள் ஆவேசமடைந்து பள்ளியை முற்றுகையிட்ட தகவலறிந்து, பழனி அருகே உள்ள கீரனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து, பள்ளி வளாகம் மற்றும் பாதிக்கப்பட்ட குடிநீர் தொட்டி ஆகியவற்றை போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து இதுபோன்ற சமூக அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் மௌனம் காப்பதும் சர்ச்சையாகி உள்ளது.

பள்ளிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என்றும், பிஞ்சு குழந்தைகளின் குடிநீரில் மலத்தைக் கலந்த கொடூர மனம்படைத்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+