100%.. சபாஷ்.. நாட்டிலேயே முதன்முறையாக.. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நகராட்சி "கொடைக்கானல்"
திண்டுக்கல்: நாட்டிலேயே முதன்முறையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக கொடைக்கானல் திகழ போகிறது..!
சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தலைதூக்கியது.. அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும்கூட, தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
எனினும், தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. குறிப்பாக, அந்தந்த மாவட்டங்களின் நோய் தொற்றின் தன்மைக்கு ஏற்ப, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக முதல்வர் அனுமதி வழங்கியிருக்கிறார்...

தொற்று பரவல்
இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், நோய்ப் பரவல் தன்மைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகமும் நடைமுறைப்படுத்தி வருகிறது... இதில் கூடுதலாக, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதியாக 9 இடங்களை கண்டறிந்து ஒரு வாரத்துக்கு அந்த பகுதிகளிலுள்ள கடைகளை திறக்க சென்னை மாநகராட்சி தடை போட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றன.

பீதி - கலக்கம்
தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது... எனினும் 3-ம் அலை குறித்த பீதியும் கலக்கமும் பொதுமக்களிடம் உள்ளது.. இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

மா.சுப்பிரமணியம்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்... அப்போது அவர் சொன்னதாவது: "கொடைக்கானல், பழனியில் வாழும் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்படும். இதில் கொடைக்கானலில் தற்போது 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் தடுப்பூசி போடப்படும்.

திண்டுக்கல்
அதேபோல் ஆன்மிக சுற்றுலாத் தலமான பழனியிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இதற்காக கொடைக்கானல், பழனிக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கப்படும்.திண்டுக்கல்லில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் செயல்படும் மையத்தில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக ரூ.52 லட்சம் செலவில் பரிசோதனை கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக தினமும் 2 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் செய்யலாம். மேலும் திண்டுக்கல்லில் 2 நடமாடும் தடுப்பூசி வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

தடுப்பூசிகள்
இதனைதொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது... வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் கொரோனா டெஸ்ட் செய்து வருகின்றனர்.

நகராட்சி
இதனால் கொடைக்கானல் நகராட்சியில் இதுவரை 99 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்... முதல் மற்றும் 2-வது டோஸ் 99 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் 150-க்கும் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படவேண்டும். அவர்களுக்கும் இன்னும் 2 நாட்களில் செலுத்தப்பட்டு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக கொடைக்கானல் மாற போகிறது.. இதனால் சுகாதாரத்துறையினர் அவர்களை வீடு வீடாகத் தேடி சென்று தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கிறார்கள்.

பழங்குடி மக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 88 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது... இதில் முதல் டோஸ் 4 லட்சத்து 94 பேருக்கும், 2-வது டோஸ் 94 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது... பழனியில் 68 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இப்படித்தான் பழங்குடி மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியல் நீலகிரி மாவட்டம், இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்தது..இப்போது 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக கொடைக்கானல் மாற உள்ளது..!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications