28 நாளில் கசந்த திருமண வாழ்க்கை! 1500 கொடுத்து ’முத்தலாக்’ செட்டில்மெண்ட்.. போலீசுக்கு போன இளம்பெண்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திருமணமாகி 28 நாட்கள் கணவருடன் வாழ்ந்ததற்கு 1500 ரூபாய் பணம் கொடுத்து அவமானப்படுத்துவதாகவும், திருமணம் செய்த தனக்கு முத்தலாக் நோட்டீஸ் அனுப்பிய கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இளம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி லட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் 31 வயதான நஸ்ரின் பானு ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த காதர் ரியாஸ் என்ற இளைஞருடன் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் கணவர் காதர் ரியாஸின் அம்மா மற்றும் அக்கா ஆகியோருடன் நஸ்ரினை பழனியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு சென்றுள்ளார்.
சில நாட்கள் கழித்து நஸ்ரின் பானுவின் பெற்றோர் கணவர் வீட்டிற்கு சென்ற போது மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் மட்டுமே காதர் ரியாசுடன் வாழ முடியும் எனக் கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். நஸ்ரின் பானுவின் பெற்றோர் ஏற்கனவே கடன் வாங்கி 32 சவரன் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்த நிலையில் மேலும் 20 சவரன் நகை கேட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து மணமகனின் வீட்டிற்குச் சென்று பலமுறை பேசியும் அவர்கள் ஒத்துக் கொள்ளாததால் பழனி மகளிர் காவல் நிலையத்தில் நஸ்ரின் பானு வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நஸ்ரின் பாத்திமாவிற்கு அவரது கணவர் முத்தலாக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் தன்னுடன் 28 நாட்கள் வாழ்ந்ததற்கு 1500 ரூபாய் பணம் தருவதாக வரையோலை எடுத்து அனுப்பியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நஸ்ரின் பானு மற்றும் குடும்பத்தினர் பழனி நகர காவல் நிலையம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் புகாரை வாங்க மறுத்ததுடன். முத்தலாக் தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் தமிழகத்தில் எந்த காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தனது பெற்றோர் கொடுத்த நகையை பறித்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தான் வாழ்ந்ததற்காக 1500 ரூபாய் பணத்தை கொடுத்து அவமானப்படுத்திய நபர் மீது மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ரியாஸ் தரப்பிடம் விளக்கம் கேட்க முயன்ற போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. மேலும் காவல்துறை தரப்பிலும், உரிய பதில் இல்லை என நஸ்ரின் வீட்டார் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications