வங்ககடலில் உருவாகிறது இந்தாண்டின் முதல் புயல் அர்ணாப்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் பதிவு
திண்டுக்கல்: வங்ககடலில் உருவாகிறது இந்தாண்டின் முதல் புயல் அர்ணாப். செப்டம்பர் 20 ம் தேதி ஒட்டி வடக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இத்தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் பதிவிட்டுள்ளார். இப்புயலால் தென்மேற்கு பருவமழை விடைபெறும் நிகழ்வு இந்தியாவில் தீவிரமடையும் என்றும் டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்ட பதிவில் கூறுகையில்,
"1. 2026 ஆம் ஆண்டின் முதல் புயல் செப் 23ம் தேதி ஒட்டி உருவாக வாய்ப்பு.
2. செப்டம்பர் மாதத்தில் கடந்த 165 ஆண்டுகளில் வங்கடலில் உருவாகும் 47 வது புயல்.
3. கடந்த 25 அண்டுகளில் செப்டமப்ர் மாதத்தில் 3 புயல்களே உருவாகியுள்ளது.
4. சூப்பர் எல் நினோ ஆண்டுகளான 1972, 1997 ஆண்டுகளிலும் செப்டம்பர் மாதத்தில் புயல் உருவானது குறிப்பிடதக்கது.

5. வங்ககடலில் உருவாகும் அடுத்த புயலிற்கு "அர்ணாப்" (Arnab) என பெயரிடப்படும். இப்பெயர் வங்கதேசம் பரிந்துரைத்தது.
7. உருவாகும் புயல் வடக்கு ஆந்திரா மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடக்கும்.
8. இப்புயலால் தமிழ்நாட்டிற்கு நேரடி தாக்கம் ஏதும் இல்லை.
9. தாழ்வு பகுதி உருவாகும் போது செப் 19-21 வரை மாலை/இரவு வெப்பச்சலன இடிமழை பதிவாகும்.
10. இப்புயலால் தென்மேற்கு பருவமழை விடைபெறும் நிகழ்வு இந்தியாவில் தீவிரமடையும்" டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
டெல்டா வெதர்மேன் நேற்று வெளியிட்ட பதிவில் கூறுகையில்
விடைபெறும் தென்மேற்கு பருவமழை, உருவாகிறது புயல் சின்னம்.
==> மேற்கு இராஜஸ்தான் பகுதிகளில் செப்டம்பர் 19ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பின்வாங்க துவங்கும்.
==> கேரளம், தமிழ்நாடு உள்பட இந்தியா முழுதும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு பருவமழை முழுமையாக பின்வாங்கும்.
==> செப்டம்பர் 23ம் தேதிவாக்கில் வடக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இந்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுபெற வாய்ப்பு.
==> இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த தாக்கமும் இல்லை அதே சமயத்தில் இந்த புயல் சின்னம் தென்மேற்கு பருவமழை பின்வாங்கும் நிகழ்வை வேகப்படுத்த வாய்ப்பு" என்று கூறியுள்ளார்.
இன்றைய வானிலை நிலவரம் என்ன
இன்று பிற்பகல் முதல் மாலை வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை நிலவலாம்; இந்த நிகழ்வுகள் காஞ்சிபுரம் வரையிலும் பரவ வாய்ப்புள்ளது என்று வானிலை முன்னிறிப்புகள் தெரிவிக்கின்றன.
சில இடங்களில் குறுகிய நேரத்திற்கு பலத்த மழை பெய்யலாம் என்றும், பலத்த காற்று மற்றும் இடி மின்னல் ஏற்படலாம். தென் தமிழகத்திலும், குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று வட தமிழகமே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய பகுதியாக இருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் மழை மற்றும் இடியுடன் கூடிய மழையின் தாக்கம் அதிகரிக்கும்; செப்டம்பர் 18 முதல் 22 வரை தீவிரமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை முன்னறிவுப்புகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
