ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு சூறையாடிய வத்தலகுண்டு சுங்க சாவடி- 300 பேர் மீது வழக்கு!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திறக்கப்பட இருந்த லட்சுமிபுரம் சுங்க சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடியது தொடர்பாக பொதுமக்கள், விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் மீது பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து கேரளாவின் குமுளி வரை செல்லக் கூடிய தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியமானது. திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு நகருக்குள் செல்லாமலேயே புறவழிச் சாலையில் செல்கிறது இந்த தேசிய நெடுஞ்சாலை.

திண்டுக்கல்லை அடுத்து செம்பட்டி, பட்டிவீரன்பட்டி, வத்தலகுண்டு புறவழிச்சாலை வழியாக பெரியகுளம், தேனி, கம்பம், கூடலூர்- குமுளி செல்கிறது இந்த நெடுஞ்சாலை. இந்த சாலை விரிவாக்கப்பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக சாலை விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தொகை ரூ333.13 கோடி.
இந்த நெடுஞ்சாலையில் தேனி உப்பார்பட்டி அருகே 3 ஆண்டுகளுக்கு முன்னரே சுங்கச் சாவடி திறக்கப்பட்டு கட்டண வசூல் நடைபெற்று வருகிறது. இதேபோல பட்டிவீரன்பட்டி- சேவுகம்பட்டி பகுதியில் லட்சுமிபுரத்தில் புதிய சுங்கச் சாவடி ஒன்றை அமைத்தது தேசிய நெடுஞ்சாலை.
ஆனால் இந்த சுங்கச் சாவடியை அமைக்க தொடங்கிய நாள் முதலே அப்பகுதி கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்; இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமலேயே சுங்கச் சாவடி அமைக்கும் பணியை நிறைவு செய்தது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
இந்த நிலையில்தான் சாலை பணிகளே முழுமை அடையவில்லை; மின்விளக்கு வசதிகளும் இல்லை; இந்த நிலையில் சுங்க கட்டணம் வசூல் எதற்கு என்ற கேள்விகளுடன் நேற்று திறக்கப்பட இருந்த லட்சுமிபுரம் சுங்கச் சாவடியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது சுங்கச் சாவடியை பொதுமக்கள் ஆத்திரத்துடன் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் சுங்க சாவடி ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு உயிரை கையில் பிடித்தபடி ஓடிப் பதுங்கிக் கொண்டனர்.
பட்டிவீரன்பட்டி சுற்றுவட்டார பொதுமக்களின் தன்னெழுச்சியான இந்த ஆவேசப் போராட்டத்தால் லட்சுமிபுரம் டோல்கேட் பகுதியே போர்க்களமாக மாறியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டிவீரன்பட்டி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் லட்சுமிபுரம் டோல்கேட்டை சூறையாடியதாக அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் என 300க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications