2 நாளில் 3 காக்கிகளுக்கு வேலை காலி.. அடுத்தடுத்து ஆக்‌ஷன் எடுக்கும் காவல்துறை! என்ன தான் நடந்தது?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய பணியாற்றி வந்த சார்பு ஆய்வாளர் ராஜகோபால் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்று, அவருக்கு நள்ளிரவில் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி அத்துமீறல் புகாரில் கடந்த மே மாதம் பணியிடை நீக்கம் திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி சார்பு ஆய்வாளர் ராஜகோபாலை கட்டாய பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜகோபால். கடந்த மே மாதம் தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது விசாரணை என்ற பெயரில் அந்த பெண்ணின் அலைபேசி எண்ணை ராஜகோபால் பெற்றுக்கொண்டுள்ளார்.

Police Dismiss tn govt

அதற்குப் பிறகு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அந்த பெண்ணுக்கு தொடர்ந்து அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. முதலில் சாதாரணமாக தொடங்கிய உரையாடல் பின்னர் ஆபாசமாக மாறியதாகவும், தொடர்ந்து தொந்தரவு ஏற்பட்டதால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண், சார்பு ஆய்வாளர் அனுப்பிய குறுஞ்செய்திகளின் ஆதாரங்களுடன் உயர் காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து திண்டுக்கல் காவல் துறை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராஜகோபால் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டது உறுதியானது. குறிப்பாக புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசி எண்ணுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியிருப்பது காவல் துறையையே சங்கடத்திற்கு உள்ளாக்கியது.

இதையடுத்து ராஜகோபாலை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அப்போதைய திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் சசிமோகன் உத்தரவிட்டார். ​இந்த நிலையில், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதால், அவருக்கு உச்சபட்ச தண்டனையாக காவல் துறைப் பணியில் இருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்து மதுரை தென் மண்டல ஐ.ஜி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமனை கட்டாயப் பணி நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கௌதமன் பணியாற்றியபோது, புகாரை முறையாகக் கையாளாமல் அலட்சியமாகச செயல்பட்டது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று தூத்துக்குடியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்த நிலையில் காவல் ஆய்வாளர் திலீபன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உரிய அனுமதியின்றி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணிக்கு வராத காரணத்தால் திலீபன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படி 2 நாட்களுக்குள் 3 போலீசாரின் யூனிஃபார்ம் கழற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+