Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாட்ரிக் அடிப்பாரா? ரெடியாகும் திண்டுக்கல் சீனிவாசன்! டஃப் கொடுக்க தயாராகும் திமுக! யாருக்கு சாதகம்?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தீவிரமாகி வரும் நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகள் தங்கள் தொகுதிகளில் களப்பணியை தீவிரப்படுத்த தொடங்கி இருக்கின்றனர். அதிமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தனது தொகுதியில் ஹட்ரிக் வெற்றி பெற முயற்சித்து வருகிறார். அதே நேரத்தில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கி வந்த திமுக இந்த முறை தானே களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் களமிறங்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. ஏற்கனவே பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் உள்ளிட்டவையும் நடைபெற்று வருகிறது.

TN Assembly Election Dindigul AIADMK

அந்த வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டனர்.

தமிழ்நாடு தேர்தல் 2026

இது ஒருபுறம் இருக்க திமுக தரப்பில் இருக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளில் தேர்தல் வேலையை துவக்கி விட்டனர். ஆலோசனை, பொதுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கோவில் திருவிழாக்களில் பங்கேற்பது என தொகுதி முழுக்க வலம் வருகின்றனர். இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அதிமுகவினரின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அந்த வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தற்போது தங்கள் பணிகளில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

திண்டுக்கல் தொகுதி

அந்த வகையில் திண்டுகல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் இந்தமுறை தனது தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என முயற்சித்து வருகிறார். திண்டுக்கல் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து எம்பியாக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். மேலும் 2016, 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்ற அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என முயற்சித்து வருகிறார். கட்சியின் பொருளாளர், அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வைத்திருப்பதோடு அதிமுகவின் சீனியர்களின் முக்கியமானவர் திண்டுக்கல் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக திண்டுக்கல் சீனிவாசன்

மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார். சமுதாய வாக்கு கட்சியினர் ஆதரவு என பல பிளஸ் பாயிண்ட்டுகள் திண்டுக்கல் சீனிவாசனுக்கு இருக்கிறது. ஆனால் அதெல்லாம் எதிர்க்கட்சியாக திமுக போட்டியிடாத வரை தான். இதுவரை திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து கூட்டணி கட்சி வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். மேலும் கடந்த சில சட்டமன்றத் தேர்தல்களை திமுக நேரடியாக அதிமுகவை எதிர்க்கவில்லை என்பதையும் குறிப்பிடத்தக்கது. பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளே மாறி மாறி திண்டுக்கலில் போட்டியிட்டுள்ளன.

அதிமுக திமுக போட்டி

இந்த நிலையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் களமிறங்க தயாராகி வரும் நிலையில் அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவில் எழுந்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் என்ற பெயர் மட்டுமே திண்டுக்கல் சீனிவாசனுக்கு இருக்கும் நிலையில் சில விவகாரங்களில் அவர் மீதான எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கட்சியினரை கண்டு கொள்வதில்லை தொகுதி மக்களே சந்திக்கவில்லை என பல குற்றச்சாட்டுகள் திண்டுக்கல் சீனிவாசன் மீது வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகரான திண்டுக்கல் தொகுதியை கைப்பற்ற திமுக தீவிரமாக முயன்று வருகிறது.

திமுக வேட்பாளர்

இதுவரை நடந்த தேர்தல்களில் நான்குக்கு மூன்று என்ற அளவில் தான் தேர்தல் வெற்றி தோல்வி இருக்கிறது. இந்த முறை முழுமையாக திண்டுக்கல் மாவட்டத்தை கைப்பற்றாவிட்டாலும் குறைந்தது 5க்கு 2 என்ற தொகுதி கணக்கில் வெற்றி பெற வேண்டும் என திமுக விரும்புகிறது. இதற்காக இந்த முறை திண்டுக்கல்லில் திமுகவே களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. அமைச்சர் ஐ.பெரியசாமி அல்லது அவர் மகன் ஐபி செந்தில்குமார் ஆகியோர் திண்டுக்கலில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் வந்த நிலையில் இந்த முறை திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றுவோம் என உறுதியாகச் சொல்லி இருக்கிறார். இதன் மூலம் இளைஞரணி சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+