திண்டுக்கல்லில் ஒரே நாளில் அம்பலப்பட்ட 2 பெண் அதிகாரிகள் கைது.. ஆபிஸிலேயே நடந்த சம்பவம்
திண்டுக்கல்: அரசு அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் ஒருவர் லஞ்சம் வாங்கிய புகாரில் கையும் களவுமாக சிக்கினார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராம நிர்வாக அதிகாரி பட்டா பெயர் மாற்றத்திற்காக சிக்கினார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் லஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். திண்டுக்கல்லை அடுத்த நரசிங்கபுரம் வி.கள்ளுப்பட்டியை சேர்ந்த 30 வயதாகும் பிரியதர்ஷன் பொறியாளர் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்ட நிலையில், உரிய ஆவணங்களுடன் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளது.

இதையடுத்து பிரியதர்ஷனும் உரிய ஆவணங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சமூகநல விரிவாக்க அலுவலர் உமாராணி திருமண உதவித்தொகை, 8 கிராம் தங்கம் வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டாராம்.
ஆனால் அவ்வளவு தொகை தன்னிடம் இல்லை என்று பிரியதர்ஷன் கூறினார். இதையடுத்து ரூ.3 ஆயிரத்தை கொடுத்துவிட்டு உதவித்தொகை, தங்கத்தை பெற்றுச்செல்லுமாறு கூறினாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரியதர்ஷன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் டிஎஸ்பி நாகராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி தலைமையிலான போலீசார் உமாராணியை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி ரசாயனம் தடவப்பட்ட 3 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளை பிரியதர்ஷனிடம் கொடுத்தனர். அந்த பணத்தை அவர், நேற்று காலை 11 மணி அளவில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று உமாராணியிடம் கொடுத்துள்ளார்,
அதை அவர் வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உமாராணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பிலாத்து ஆண்டிக்குளம் பகுதியை சேர்ந்த 60 வயதாகும் விவசாயி கருப்பையா என்பவர் பி.எம்.கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கான உதவித்தொகை பெற்று வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பணம் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கருப்பையா, வடமதுரை உதவி வேளாண்மை அலுவலர் சந்திரலேகாவிடம் கேட்டுள்ளாராம் அப்போது அவர் வேளாண்மை துறையின் 'கிரைன்ஸ்' என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் உங்களுக்கு பணம் வந்துவிடும். அதற்கு ரூ.2,500 லஞ்சம் தரவேண்டும் என கேட்டாராம்.
கருப்பையா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இறுதியாக ரூ.2 ஆயிரம் தந்தால் செய்து கொடுப்பதாக சந்திரலேகா கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பையா திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை கருப்பையாவிடம் கொடுத்து அனுப்பினர்.
வடமதுரை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கருப்பையா சென்று சந்திரலேகாவிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திரலேகாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications