கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த்து விபத்து.. 3 பேர் பலி.. பலர் படுகாயம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கொடைக்கானலில் இருந்து பழனிக்கு செல்லும் வழியில் சவரிக்காடு அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Two Killed as Tourist Van Plunges into Gorge on Kodaikanal Palani Route

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் மலைப் பாதையில் சவரிக்காடு அருகே வியாழக்கிழமை இரவு 24 பயணிகளுடன் வந்த வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்துள்ளது. இதுவரை 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் கோவை மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஷேக் பரீத், நிஜாமுதீன் ஆகியோர் உள்ளிட்ட 3 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+