பழனி மலைக்கோவிலில்.. விஜய் பிரசார பாடல்! தவெகவினரை வலைவீசி தேடும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், இக்கோயிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சார பாடல் ஒலித்திருக்கிறது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றுதான் பழனி முருகன் கோவில். இந்த கோவில் பற்றி புறநானூறு மற்றும் அகநானூறு போன்றவற்றில் பாடப்பட்டிருக்கிறது. குறைந்தது 2-3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்த கோவில் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இந்த கோவிலை பார்க்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

Vijay

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். எனவே திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க, போலீசார் சார்பில் கோவில் படிகளின் தூண்களில் ஸ்பீக்கர்களை வைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் கொண்டு வரும் பொருட்கள் தொலைந்து போனால், சிறுவர்கள் காணாமல் போனால் இந்த ஸ்பீக்கர் மூலமாக அறிவிக்கப்படும்.

இந்த பயன்பாட்டுக்காக உள்ள ஸ்பீக்கரை, செல்போனில் கனெக்ட் செய்து, அதில் 'உங்க விஜய், உங்க விஜய்' என விஜய்யின் பிரச்சார பாடலை தவெகவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒலிபரப்பியிருக்கிறார். இப்படி செய்வது பக்தர்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவில் என்பது மன அமைதிக்காக ஒன்று கூடும் இடம். இங்கு வந்து, அரசியல் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக கட்சியின் பிரசார பாடல்களை ஒலிக்க வைத்திருந்தது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 1ம் தேதி தைப்பூச திருவிழா அன்று, யானைப்பாதையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பாடல் ஒலிபரப்பப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரான நிலையில், இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோயில் நிர்வாகத்தினர் இது குறித்து கூறுகையில், "முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும்தான் இந்த ஸ்பீக்கர் அமைக்கப்பட்டிருக்கிறது. போலீசார்தான் இதை அமைத்திருக்கின்றனர். அந்த ஸ்பீக்கரை செல்போனில் கனெக்ட் செய்து அரசியல் பிரச்சார பாடல்களை ஒலிக்க வைத்தவர் குறித்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+