திண்டுக்கல் ஜக்கிரியாவுக்கு வந்த ஆசை.. இப்போ ஒட்டு மொத்தமும் போச்சே! பின்னால் மறைந்திருந்தது யார்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பட்டா மாறுதல் வழங்குவதற்காக 2500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட இருக்கிறார். லஞ்சம் பெரும் போது பின்னால் மறைந்திருந்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிக்கும் அளவில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என ஆகிவிட்டது எங்கு போனாலும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் பெற முடியாது. பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை லஞ்சம் தான் எங்கும் பரவிக் கிடக்கிறது என குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் லஞ்ச பணத்துடன் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பத்திரப் பதிவு அலுவலகங்கள் தொடங்கி கிராம நிர்வாக அலுவலகங்கள் வரை பொறிவைத்து அதிகாரிகளை கைது செய்து வருகின்றனர் லஞ்ச ஒழிப்பு போலீசார். அந்த வகையில் தான் திண்டுக்கல்லில் 2500க்கு ஆசைப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் பண்ணைப் பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரன் அதே ஊரில் நிலத்தை வாங்கி இருக்கிறார் அந்த நிலத்தை தனது பெயரில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என ஆன்லைன் மூலம் மார்ச் மாதத்தில் விண்ணப்பித்திருக்கிறார். தொடர்ந்து அவருக்கு வருவாய் துறை சார்பில் பட்டா கொடுக்கப்பட்டது. ஆனால் மகேஸ்வரன் பெயரோடு வேறு சில பெயர்களும் அதில் கூட்டு பட்டாவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனக்கு தனிப்பட்டா வேண்டுமென விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக சிலுவத்தூர் கிராம நிர்வாக அதிகாரியான முகம்மது ஜக்கிரியா மகேஸ்வரனை அழைத்து பேசியிருக்கிறார். தனிப்பட்டா வழங்க தனக்கு 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என பேரம் பேசி இருக்கிறார். இறுதியில் 2500 ரூபாய் தருவதாக மகேஸ்வரனும் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் ஜக்கிரியா தன்னிடம் லஞ்சம் கேட்டது குறித்து மகேஸ்வரன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் கொடுத்திருக்கிறார்.
இதை அடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மகேஸ்வரனிடம் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். நேராக சிறுவத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்ற மகேஸ்வரன் முகமது ஜக்கிரியாவிடம் 2500 ரூபாய் பணத்தை கொடுத்து இருக்கிறார். அதனை வாங்கிய போது ஏற்கனவே அங்கு மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நாகராஜன் உள்ளிட்ட போலீசார் ஜக்கிரியாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து லஞ்சப் பணத்துடன் அவரை கைது செய்திருக்கின்றனர். 2500 ரூபாய் பணத்துக்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை இழந்திருக்கிறார் ஜக்கிரியா.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications