திண்டுக்கல் வீட்டில் ஆசிரியை தீபிகா.. ரோட்டில் கணவன்... அடுத்தடுத்து ஆடிப்போக வைத்த சம்பவம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜ், இவருடைய மனைவி ஞான தீபிகா . இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். சேசுராஜ் தனது மனைவி தீபிகா உடன் நேற்று இரவு 7.15 மணியளவில் திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் ஆர்.எம்.டி.சி. நகர் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் செய்த சம்பவம் ஆடிப்போக வைத்துள்ளது.
திண்டுக்கல்லை அடுத்த யாகப்பன்பட்டியை சேர்ந்த 41 வயதாகும் சேசுராஜ் என்பவர் மீன் வியாபாரி ஆவார். இவருடைய மனைவி ஞான தீபிகாவுக்கு 30 வயது ஆகிறது. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சேசுராஜ் நேற்று இரவு 7.15 மணியளவில் திண்டுக்கல்- நத்தம் சாலையில் ஆர்.எம்.டி.சி. நகர் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் சேசுராஜ் வந்த இருசக்கர வாகனத்தை மறித்தனர்.

பின்னர் கண் இமைக்கும் நேரத்துக்குள் அவரை பெரிய வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் . கீழே சரிந்த சேசுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேசுராஜை கொலை செய்த பின்னர் அந்த மர்ம கும்பல் நேராக அவருடைய வீட்டுக்கு சென்று சேசுராஜின் மனைவி ஞான தீபிகாவையும் சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். அப்போது அவருடைய மகன் அவர்களை தடுத்தார்.
இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரையும் வெட்டினர். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஞான தீபிகாவை மீண்டும் வாளால் வெட்டிச்சாய்த்துவிட்டு தப்பிச்சென்றனர். ஒரே நேரத்தில் கணவன் மனைவி இருவரும் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் நடத்திய விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் விசாரணையில் கொலையான சேசுராஜ், அவருடைய உறவினரான வேடப்பட்டி ஞானநந்தகிரிநகரை சேர்ந்த மாயாண்டி ஜோசப் (63) என்பவரை 2024-ம் ஆண்டு மே 23-ந் தேதி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. தனது நாட்டாமை பதவி பறிபோக மாயாண்டி ஜோசப் தான் காரணம் என நினைத்த சேசுராஜ், 6 பேருடன் சேர்ந்து அந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஜேசுராஜ் உள்பட 7 பேரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சேசுராஜ் சமீபத்தில் தான் ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். மாயாண்டி ஜோசப் கொலைக்கு பழிக்குப்பழியாக சேசுராஜூம் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications