Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸ்டாலின் ரிட்டர்ன்ஸ்".. கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்.. அப்படின்னா "சம்பவம்" திமுகவில் நடக்க போகுது?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு சென்றிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போது சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாயிருக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பரபரப்புகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன.. இதில், இந்தியா கூட்டணி வெற்றிக்காக, தமிழகமெங்கும் தீயாய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

When will CM MK Stalin return to Chennai and Why did Sudden change in his Kodaikanal Summer Trip

ஸ்டாலின்: தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு நிலையில் தலைவர்கள் பலரும் ஓய்வு எடுத்து வருகிறார்கள்.. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினும் கடந்த 29- ந்தேதி தன்னுடைய குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்றார்... அங்கிருக்கும் பாம்பார்புரத்திலுள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்..

இந்த ஹோட்டலிலேயே காலை நேரத்தில் வாக்கிங் செல்கிறார் ஸ்டாலின்.. பிறகு, பசுமை பள்ளத்தாக்கிலுள்ள கோல்ப் மைதானத்திற்கு சென்று கோல்ப் விளையாடினார்... வழக்கமாக முதல்வர் ஸ்டாலின் எந்த ஊருக்கு சென்றாலும், அங்கிருக்கும் பொதுமக்களை கண்டு நலம்விசாரிப்பது வழக்கம்..

மகிழ்ச்சி: அந்தவகையில், கொடைக்கானலிலும் தான் செல்லும்பகுதியில், மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுடன் மகிழ்ந்து உரையாடினார்.. இப்போது சீசன் என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர்.. முதல்வரை அங்கு பார்த்ததுமே, மொத்த பேரும் குதூகலமடைந்துவிட்டார்கள்.. ஆசை ஆசையாக முதல்வருடன் சேர்ந்து செல்பிகளையும் எடுத்து மகிழ்ந்தனர்.

நேற்றைய தினமும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது... ஆனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகிவிட்டதால், முதல்வரின் படகு சவாரி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது... அதனால், மாலையில் துர்கா ஸ்டாலின் மட்டும் தன்னுடைய குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தார்... அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் துர்கா ஸ்டாலினுடன் ஆர்வத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

ஓய்வு: இந்த நிலையில், 5 நாட்கள் ஓய்வுக்காக கொடைக்கானலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் வருகிற 4- ந்தேதி வரை, அங்கேயே தங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று மாலையே முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின.. இப்போது நாளை திரும்புவார் என்று கூறப்படுகிறது.. எப்படி பார்த்தாலும், முன்கூட்டியே தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்ப உள்ளார் முதல்வர்.

கொடைக்கானலில் இருந்து புறப்படும் முதல்வர், மதுரை விமான நிலையம் சென்று, பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

பயண மாற்றம்: எதற்காக இந்த திடீர் பயண மாற்றம் என்று தெரியவில்லை.. ஆனால், தேர்தல் பணியில் சரியாக களப்பணியில் ஈடுபடாதவர்கள் குறித்த ரிப்போர்ட் ஏற்கனவே ஸ்டாலினுக்கு சென்றிருந்தது.. கொடைக்கானல் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதுமே, சரியாக வேலை பார்க்காதவர்களுக்கெல்லாம் "கச்சேரி" இருக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+