சிறையில் பிரிந்த உயிர்..பழனி கோவில் நில மோசடியின் ‘ராஜன்’.! யார் இந்த அன்வர்தீன்? வெளியான பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம் அடைந்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பகட்ட சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் வராத அன்வர்தீன் திடீரென கைதானது எப்படி? பழனி நில மோசடி வழக்கில் அவருக்கான தொடர்பு என்ன? என்பது குறித்தான அதிர்ச்சி தரும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் பழநி பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advocate Anvardeen

இந்த வழக்கில் இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், மோசடியாக நிலம் வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழநி புதுார் சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய நால்வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி ஜஸ்டின் மணிகண்டன் கொடைக்கானலில் வைத்து சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் உடல்நிலை சரியில்லாத திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேற்று மருத்துவமனையில் நேரில் பார்வையிட்ட திண்டுக்கல் நீதிமன்ற நீதிபதி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மோசடியில் தொடர்புடைய பத்திர எழுத்தர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் வெளிமாநிலத்தில் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி.,தனிப்படையினர் வெளிமாநிலத்தில் முகாமிட்டர். இந்த தகவலைக் கேட்டதும் ஜெயபிரகாஷ் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் தரப்பில் திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த வழக்கு நீதிபதி பாக்கியராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ஜாமீன் மூன்று நபர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே வெள்ளை துறையின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளதுரை முருகதாஸ் சேதுபதி மற்றும் அன்வர்தீன் ஆகிய நால்வருக்கும் நேற்று மதியம் வரை சிபிசிஐடி போலீசார் காவலில் விசாரணை செய்ய திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அன்வர்தீன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென அன்வர்தீன் உயிரிழந்ததாக தகவல் பரவியது. தொடர்ந்து விசாரித்த போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அன்வர்தீன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நீதிபதி நேரில் சென்று இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருக்கிறார்.

இதற்கிடையே பக்கவாதம், சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் அனுமதிக்கு இருந்ததும் அதனால் அவர் உயிரிழந்ததும் தற்போது தெரிய வந்திருக்கிறது. இதற்கிடையில் பழனியில் மோசடி வழக்கில் ஜஸ்டின் மணிகண்டன், சேதுபதி, வெள்ளத்துரை, முருகதாஸ் உள்ளிட்டோர் மட்டுமே முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட நிலையில் முதல் கைது பட்டியலில் அன்வர்தீன் இடம் பெற்றது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அன்வர்தீன் யார்? பழனி நிலமோசடி வழக்குக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என விசாரித்த போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகினர். தண்டபாணி மடத்துக்கு நான் தான் அறங்காவலர் என சொன்ன முருகதாஸ், இந்த நிலத்தை முறைகேடாக விற்பனை செய்வதற்காக முதன் முறையாக நாடியது வழக்கறிஞர் அன்வர்தீனை தான் என்கின்றனர். அன்வர்தின் மூலமாகத்தான் சேதுபதி, வெள்ளத்துரை ஆகியவுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து அன்வர்தீன் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரை அணுகி தான் தயாரித்துக் கொடுத்த பத்திரத்தை பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக ஜஸ்டின் மணிகண்டனை நாடி இருக்கிறார். ஜெயபிரகாஷும், ஜஸ்டின் மணிகண்டனும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மோசடியாக பத்திரத்தை தயாரித்து அதை முருகதாஸ், சேதுபதி வெள்ளத்துரைக்கு எழுதிக் கொடுப்பது போல ஜஸ்டின் மணிகண்டன் மூலம் பத்திரப்பதிவு செய்ய வைத்திருக்கிறார் அன்வர்தீன். அந்த வகையில் இந்த விவகாரத்தில் இடைத்தரகராக மட்டுமல்லாது இந்த ஒட்டுமொத்த குற்றத்தை இணைக்கும் முக்கிய புள்ளியாக அன்வர்தீன் செயல்பட்டார் என்கின்றனர் பழனி வாசிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+