திண்டுக்கல் - மாம்பழம் செட்டே ஆகாதே.. மிக மோசமான தோல்வியை சந்தித்த பாமக! கரைசேர்வாரா திலகபாமா?
திண்டுக்கல்: பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் திண்டுக்கல் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. பாமக சார்பில் திலகபாமா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திலகபாமா டெபாசிட்டை இழந்தார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் பாமக போட்டியிட்டது. பாமக சார்பில் ஜோதிமுத்து மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி 7,46,523 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவால் வெறும் 2,07,551 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. முடிவில் 5.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முடிசூடினார் திமுகவின் வேலுச்சாமி.

மிக மோசமான தோல்வி: தமிழ்நாட்டிலேயே, ஏன் தென்னிந்தியாவிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்த தொகுதி திண்டுக்கல் தான். எனினும், திண்டுக்கல் தொகுதியில் பாமகவின் மாம்பழச் சின்னம் ஏற்கெனவே நன்கு பரிச்சயமானது மற்றும் வன்னியர் சமூக வாக்குகள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால் இந்த முறையும் திண்டுக்கல் தொகுதியை கேட்டுப் பெற்று களமிறங்கியுள்ளது பாமக.
இந்நிலையில், பாமக சார்பில் திண்டுக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளராக திலகபாமா அறிவிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக, சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ மாநில செயலாளர் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். இதனால் திண்டுக்கல் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
திண்டுக்கல்லில் களமிறங்கும் திலகபாமா: எழுத்தாளரும், கவிஞருமான திலகபாமா, பாமகவில் மாநில பொருளாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பாமகவின் முக்கியமான பேச்சாளராகவும் இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்தவர் திலகபாமா. மதுரையில் படித்து, தற்போது சிவகாசியில் வசித்து வருகிறார்.
ஆத்தூரில் டெபாசிட் காலி: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அனைத்து சுற்றுகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகளும், பாமக வேட்பாளர் திலகபாமா 29,607 வாக்குகளும் பெற்றனர்.
இறுதியில் ஐ.பெரியசாமி 1 லட்சத்து 34 ஆயிரத்து 82 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திலகபாமா உட்பட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில், ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி அமோக வெற்றி பெற்றார்.
திண்டுக்கல்லும் பாமகவும்: இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளார் திலகபாமா. 2021 சட்டசபை தேர்தலில் டெபாசிட்டையே இழந்து மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் திலகபாமா. 2019 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாமக தோற்ற தொகுதி திண்டுக்கல்.
ஆக, கடந்த 2 தேர்தல்களில் பாமகவுக்கு திண்டுக்கல் மோசமான முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. திண்டுக்கல்லில் பாமக இதுவரை வென்றதே இல்லை. இந்நிலையில், திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திலகபாமா கரைசேர்வாரா? நான்கு முனைப் போட்டியில் வெல்லப் போவது யார்? பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications