பேசிக் கொண்டிருக்கும்போதே காதலி நெஞ்சில் ஏர் கன்னால் சுட்ட இளைஞன்.. திண்டுக்கல் அருகே ஷாக் சம்பவம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதலியை, காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர் கன்னால் காதலியை சுட்ட காதலன் தானும் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள துவராபதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளமலைப்பட்டியைச் சேர்ந்த வீரையா மகன் செல்வம் (வயது 19) என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் துவராபதியில் உள்ள உறவினரின் வீட்டில் இன்று நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக வந்த செல்வம், தனது காதலியுடன், அவரது சித்தப்பா அண்ணாமலை என்பவரின் வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது செல்வத்திற்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அந்தச் சிறுமி, காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் அவரது சித்தப்பாவான அண்ணாமலை வீட்டில் வைத்திருந்த ஏர் கன் துப்பாக்கியால் காதலியை சுட்டுள்ளார். இதில் 17 வயது சிறுமிக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காயம் அடைந்த சிறுமியை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பார்த்த செல்வம் தானும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரையும் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் பின்னர் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் ஊரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன், காதலியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications