"அலி விட்டது கேட்சை அல்ல வேர்ல்ட் கப்பை".. ஆஸிக்கு அள்ளித்தந்த பாக்.. மீண்டும் திரும்பிய சோக வரலாறு!
துபாய்: நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான செமி பைனல் உலகக் கோப்பை டி 20 போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் 176/4 ரன்கள் எடுத்தது.
அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா 19 ஓவரிலேயே 177/5 ரன்கள் எடுத்து வென்றது. இந்த போட்டியில் ஹசன் அலி விட்ட கேட்ச்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஷாகீன் அப்ரிடி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை மேத்யூ வேட் அடித்தார்.
கடைசி 9 பந்தில் 18 ரன்கள் தேவைப்பட்ட போது பாகிஸ்தான் நினைத்து இருந்தால் அதை டிபன்ட் செய்து இருக்க முடியும். ஆனால் மேத்யூ வேட் அடித்த ஹாட் டிரிக் சிக்ஸ் காரணமாக ஆட்டம் மாறியது.

கேட்ச்
அதற்கு முன் முந்தைய பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் மேத்யூ வேட் கொடுத்த கேட்சை ஹசன் அலி தவறவிட்டார். அழகாக வந்த கேட்சை ஹசன் அலி கோட்டை விட்டார். ஹசன் அலி இந்த கேட்ச் விட்டதை பாகிஸ்தான் ரசிகர்கள் தொடங்கி பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். முக்கியமான ஆட்டத்தில் இப்படி மோசமான பீல்டிங் காரணமாக பாகிஸ்தான் தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வெற்றி
1999 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா எப்படி உலகக் கோப்பை 50 ஓவர் செமி பைனலில் வென்றதோ அதேபோல்தான் நேற்றும் வென்றது. 1999 உலகக்கோப்பை போட்டி செமி ஃபைனல் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் தூக்கி கொடுக்கும் கேட்சை தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்செல் கிப்ஸ் விட்டார். அந்த போட்டியில் ஸ்டீவ் வா 56 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஸ்டீவ் வாஹ் கேட்சை பிடித்து இருந்தால் ஆஸ்திரேலியா வீழ்ந்து இருக்கும்.

கிப்ஸ்
ஆனால் கிப்ஸ் விட்ட கேட்ச் காரணமாக ஆஸ்திரேலியா பைனல் செல்லும். பின்னர் பைனலில் உலகக்கோப்பை கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லும்.அன்று கிப்ஸ் விட்டது என்னுடைய கேட்சை அல்ல வேர்ல்ட் கப்பையே விட்டுவிட்டாய் என் ஸ்டீவ் வாஹ் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் கடந்த 2015 உலகக்கோப்பை காலிறுதியில் வஹாப் ரியாஸ் போலிங்கில் தடுமாறும் வாட்சன் கேட்சை ரஹத் அலி விட்டார்.
Recommended Video

செமி பைனல்
அந்த போட்டியிலும் ஆஸி செமி பைனல், பைனல் சென்று பின்னர் கோப்பையை வென்றது. இப்போது அதே வரலாறு திரும்பி உள்ளது. ஹசன் அலி விட்ட கேட்சால் ஆஸ்திரேலியா செமி பைனலில் வென்று பைனல்ஸ் சென்றுள்ளது. இதனால் மீண்டும் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லுமோ.. அலி விட்டது கேட்சை மட்டுமல்ல கோப்பையையும் சேர்த்துதானோ என்று கேள்வி எழுந்துள்ளது.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications