1 கோடி விதைகள்.. பச்சை பசுமையாக மாற போகுது அமீரக பாலைவனம்.. அபுதாபி பிரம்மாண்ட திட்டம்

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அமீரக பாலைவனங்களில் பூர்வீக தாவரங்களை விளைவிக்க ஒரு மெகா திட்டத்தை அபுதாபி அரசு கையில் எடுத்துள்ளது. பாலைவனங்களில் பூர்வீக செடிகளை விதைப்பதே இதன் பிரதான நோக்கமாகும். இதற்கு தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த அமீரகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

வளைகுடா நாடுகள் பெரும்பாலும் பாலைவனங்களையே கொண்டு இருக்கும். அதில் எந்தவொரு தாவரங்களும் வளரவே வளராது என்பதால் அங்கு வறட்சி, வெயில் அதிகமாக இருக்கும். ஐக்கிய அமீரகத்திலும் கிட்டத்தட்ட அதே நிலைமை தான். ஆனால், அந்த நிலையை மாற்ற அபுதாபி அரசு இப்போது மிக பெரிய திட்டத்தை போட்டு இருக்கிறது.

Abu Dhabi UAE dubai

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு

மத்திய கிழக்கின் மிக பெரிய சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டங்களில் ஒன்றாக, அபுதாபி இந்த சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அங்குள்ள பாலைவன பகுதிகளில் 1 கோடி பூர்வீக தாவர விதைகளை வான்வழியாக தூவுவதே இதன் திட்டமாகும். இயற்கை வாழ்விடங்களை மீட்டெடுப்பது, பூர்வீக தாவரங்களை மீண்டும் வளர்ப்பது, பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பது ஆகியவை இதன் பிரதான நோக்கமாகும்.

மேலும், இதன் மூலம் காலநிலை மாற்றம், பாலைவன பகுதிகள் அதிகரிப்பது போன்ற சவால்களையும் தடுக்க முடியும். இதற்காகவே அபுதாபி இந்த பிரம்மாண்ட முயற்சியை எடுத்திருக்கிறது. அதேநேரம் இதை வெறுமான ஒரு சாதாரண விதை தூவல் திட்டம் என முடித்துவிட முடியாது.. எந்த பகுதிகளில் எந்த விதைகளை தூவ வேண்டும் என்பதை தேர்வு செய்ய ஏஐ டூல்களையும் பயன்படுத்துகிறார்கள்.

ஏஐ தொழில்நுட்பம்

ஏஐ மட்டுமின்றி சாட்டிலைட் படங்கள், ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களையும் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ளனர். விதைகளை தூவியதோடு விட்டுவிடாமல்.. அவை எல்லாம் சரியாக முளைத்ததா, செடிகள் நன்றாக வளர்கிறதா என்பதை அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வல்லுநர்கள் சொல்வது என்ன!

இது தொடர்பாக அபுதாபி சுற்றுச்சூழல் வல்லுநர் நிபுணர் ஹசன் அலி அல் அஹ்பாபி கூறுகையில், "பாலைவன சுற்றுச்சூழலை மீட்டெடுத்து, இயற்கை தாவர வளர்ச்சியை அதிகரிக்கும் முக்கியமான திட்டமாக இது இருக்கும். மனிதர்களின் தலையீடு குறைவாக இருக்கும் வகையில் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவே பெரும்பாலான பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வேகமாக எல்லா பணிகளையும் முடிக்க முடியும்" என்றார்.

இந்த திட்டத்தில் கீழ் காஃப், சமர், ஆர்டா போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் பாலைவன சூழலுக்கு ஏற்ற பூர்வீக தாவரங்களை மட்டுமே விதைக்கவும் முடிவு செய்துள்ளனர். மண் தன்மை, உப்புத்தன்மை மற்றும் இயற்கை சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு தாவர இனமும் தேர்வு செய்யப்படுகிறது. அல் ஷுவெய்ப், ஸ்வெய்ஹான், நஹில், அல் ஹயர், அல் ரவ்தா உள்ளிட்ட பகுதிகளுடன் அங்குள்ள பாதுகாப்பு மண்டலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

திட்டம் என்ன

ஏஐ தொழில்நுட்பங்கள் மூலம் தாவரங்களின் ஆரோக்கியம், அடர்த்தி ஆகியவை மதிப்பிடப்பட்டு, விதை முளைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள இடங்கள் துல்லியமாக கண்டறியப்படுகின்றன. விதைகள் சேகரிக்கப்பட்ட பிறகு அவை சுத்தம் செய்யப்பட்டு, ஆய்வகங்களில் அவை பரிசோதிக்கப்படுகிறது. பிறகு அதில் இருந்து விதை உருண்டைகள் தயாரிக்கப்படும். அவை பின்னர் ட்ரோன்கள் அல்லது விமானங்கள் மூலம் தூவப்படுகின்றன.

பாலைவனங்களில் குறைந்த மழை, அதிக வெப்பநிலை, மணல் நகர்வு உள்ளிட்ட காரணங்களால் பூர்வீக தாவரங்கள் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதை மாற்றவே அமீரக அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+