40 வருஷமா பட்ட கஷ்டம்.. லாட்டரி ரூபத்தில் கொட்டியது அதிர்ஷ்டம்.. கேரள நபருக்கு விழுந்த ரூ.57 கோடி

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஆடி போய் ஆவணி வந்தால் டாப்புக்கு வந்துவிடுவான் என்று சொல்வது போல 40 வருஷமாக கஷ்டப்பட்ட கேரளாவை சேர்ந்த முதியவர் ஒருவர் லாட்டரியினால் தற்போது ரூ.57 கோடிக்கு அதிபதியாகியுள்ளார். பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்று கூறிய அவர், அமீரகம் வரும்போது வெறுங்கையுடன் வந்ததாகவும், இப்போது இவ்வளவு பெரிய தொகைக்கு அதிபதி ஆகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் சரி, எல்லாத்துக்கும் நேரம் வந்தால் சரியாகிடும் என்று சொல்வார்கள். திடீரென ஒருவர் கோடீஸ்வரர் ஆகிவிட்டால் எல்லாம் அவன் நேரம் என்று சொல்வாங்க.. அதேபோல் உச்சத்தில் இருந்த ஒருவர் திடீரென ஏழ்மை நிலைக்கு திரும்பினாலும் அதற்கும் அவன் நேரம் என்றுதான் காலத்தையும், கடவுளையும் குறிப்பிட்டு சொல்வார்கள்.

after-40-years-kerala-man-wins-rs-57-crore-prize-in-uae-lottery

ரூ.57 கோடி பரிசு

அப்படி எந்த விஷயத்தில் பொருந்துகிறதோ இல்லையோ, லாட்டரி விஷயத்தில் கச்சிதமாக பொருந்தும் என்றே சொல்லலாம். ஆடி போய் ஆவணி வந்தால் டாப்புக்கு வந்துவிடுவான் என்று சொல்வது போல 40 வருஷமாக கஷ்டப்பட்ட முதியவர் ஒருவர் லாட்டரியினால் தற்போது ரூ.57 கோடிக்கு அதிபதியாகியுள்ளார். அமீரகம் வரும்போது வெறுங்கையுடன் வந்ததாகவும், இப்போது இவ்வளவு பெரிய தொகைக்கு அதிபதி ஆகியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த தாஜுதீன் அலியார் குஞ்சு (வயது 61) என்பவர் தான் அமீரகத்தில் லாட்டரி பிக் டிக்கெட்டில் ரூ.57 கோடியை பரிசாக பெற்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், கையில் காசு இல்லாமல் தான் அமீரகத்துக்கு வேலைக்கு வந்ததாகவும் அவர் கூறினார். இப்போது கூட லாட்டரிக்கு முழு தொகையையும் கொடுத்து அவர் வாங்கவில்லையாம்.

ஒரு பங்கு தொண்டு நிறுவனத்துக்கு

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தன்னுடன் பணிபுரிந்து வரும் 15 பேரை கூட்டாக சேர்த்து தான் இந்த லாட்டரி சீட்டை வாங்கியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தலா 100 திர்ஹாம் போட்டு இந்த லாட்டரியை வாங்கியதாகவும், இதுவரை 4 முறை வாங்கி பரிசு அடிக்காத நிலையில், 5 வதுமுறையாக லாட்டரி வாங்கியபோது இவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

ரூ.57 கோடியை 16 பேரும் பகிர்ந்துகொள்ளமாட்டோம், 17 பங்குகளாக பிரித்து ஆளுக்கு ஒரு பங்கு மற்றும் ஒரு பங்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு வழங்குவோம் என்றும் அவர் கூறினார். இந்த 16 பேர் குழுவை ஆரம்பிக்கும்போதே ஒரு பங்கினை தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற இந்த ஒப்பந்தத்தை போட்டு தான் லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாக அவர் கூறியுள்ளார்.

சொந்த வீடு கூட இல்லை

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- என் தாய் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தார். அப்போது எப்படியாவது பணம் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக என் 20 வயதில் சவூதி அரேபியா வந்தேன். இப்போது வரை உழைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள். இப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். லாட்டரியை நம்பினேன். அதற்காக அதிக பணம் எல்லாம் செலவழிக்கவில்லை.

என்னோடு கஷ்டப்படுகின்ற 16 பேருடன் சேர்ந்து தான் இந்த டிக்கெட்டை வாங்கினேன். எங்கள் 16 பேரில் பலருக்கு ஊர்களில் சொந்த வீடு கூட கிடையாது. இந்த லாட்டரி டிக்கெட்டை கூட வாங்க முடியாமல் தான் 16 பேரும் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கினோம். இன்னும் கொஞ்ச நாளில் நான் சொந்த ஊருக்கு செல்ல முடிவு எடுத்து இருந்தேன். இதனால் தான் லாட்டரி பரிசுக்கு கூட எனது இந்திய செல்போன் நம்பரை தான் கொடுத்து இருந்தேன்.

கையில் பணம் இல்லாமல் வந்தேன்..

எப்படியும் சொந்த ஊர் போய்விடுவோம் என்பதால், அந்த நம்பரை கொடுத்து இருந்தேன். இந்த நிலையில் மனைவி அந்த செல்போன் எண்ணை வைத்திருந்ததால் லாட்டரி பரிசு வெற்றி பெற்றதும் கால் செய்து இருக்கிறார்கள். புரியாத மொழி என்பதால் என் மனைவி போனை கட் செய்து வைத்துவிட்டார். இங்கே நான் டிக்கெட்டை செக் செய்த போது தான் எங்களுக்கு பரிசு அடித்து இருப்பது தெரியவந்தது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

சொந்த ஊருக்கு போக நினைக்கும் போது எனக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் போது கையில் பணம் இல்லாமல் வந்தேன். இப்போது கை நிறைய பணத்துடன் செல்ல இருக்கிறேன். எனினும் தொடர்ந்து இந்த லாட்டரி டிக்கெட் பரிசு கூப்பனில் விளையாடுவேன். ஊரில் சொந்தமாக தொழில் தொடங்கி பலருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+