மொத்த கேமராவும் அஜித்தை பார்க்க.. துபாய் ரேஸில் முதல் பரிசு வென்றவர்களே குழம்பி நிற்க! தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நேற்று துபாயில் இருந்த அவரின் ரசிகர்கள் படை.. இந்திய நட்சத்திரங்கள் பலர் இதை கொண்டாடினார்கள். அஜித் குமார் அணி தொடங்கப்பட்ட சில வாரங்களில் முறையாக பயிற்சி எடுத்து அந்த அணி சாதனை படைத்து உள்ளது.

துபாய் ஆட்டோட்ரோமில் நடந்த மிச்செலின் துபாய் 24H பந்தயத்தில் WRTயின் அல் ஃபைசல் அல் ஜுபைர், டான் ஹார்பர், மேக்ஸ் ஹெஸ்ஸி, பென் டக் மற்றும் டேரன் லியுங் ஆகியோரின் அல் மனார் ரேசிங் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

ajith kumar

அல் மனார் ரேசிங் அணி துபாய் சர்க்யூட்டின் 589 சுற்றுகளை 24 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. இரண்டாவது இடத்தை Pure Rxcing அணியின் தாமஸ் ப்ரீனிங், ஹாரி கிங் , அலெக்ஸி நெசோவ் மற்றும் அலியாக்சாண்டர் மாலிகின் ஆகியோர் வென்றுள்ளனர்.

துபாயில் நடந்தஇந்த கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நேற்று துபாயில் இருந்த அவரின் ரசிகர்கள் படை.. இந்திய நட்சத்திரங்கள் பலர் இதை கொண்டாடினார்கள். முதல் பரிசு வென்றவர்களை விட.. 3ம் பரிசு வென்ற அஜித்திற்கே ஆரவாரம் இருந்தது.

அவர்கள் பக்கம் பெரிதாக நேற்று கேமரா செல்லவில்லை. மாறாக மொத்த கேமரா குழுவும் அஜித் பக்கம் இருந்தது. அந்த ரேஸுக்கே எடுத்துக்காட்டு போல.. ஒரு பிராண்ட் போல அஜித் அங்கே நின்று கொண்டு இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. @SportsTN_ (SDAT) Logo-வை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட் பயன்படுத்தியதும் இதில் குறிப்பிடத்தக்கது.

சாதனை: துபாயில் தற்போது நடக்கும் 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமாரின் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அணி தொடங்கப்பட்ட சில வாரங்களில் முறையாக பயிற்சி எடுத்து அந்த அணி சாதனை படைத்து உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை சுட்டிக்காட்டி பெருமைப்படுத்தும் வகையில் அஜித் அந்த ஸ்பான்சர் லோகோவை தனது வாகனத்தில் பயன்படுத்தி இருந்தார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் செய்திருந்த போஸ்டில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு @SportsTN_ சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம், என்று குறிப்பிட்டு இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+