"மிரட்டும் ரோல்ஸ் ராய்ஸ்.." பின்னாலேயே 20 சொகுசு கார்கள்.. வலம் வந்த ஆனந்த் அம்பானி.. அலறிய துபாய்

Subscribe to Oneindia Tamil

துபாய்: அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி 20 கார்களை கொண்ட கான்வாய் ஒன்றில் துபாயில் பயணித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்தியாவில் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதன் தலைவராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி.

Anant Ambani travels in convoy with Rolls-Royce in Dubai to buy luxury handbags

சமீபத்தில் ஆனந்த் அம்பானி துபாயில் ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்த அதைப் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனந்த் அம்பானி: அவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள பிரபல துபாய் மாலுக்கு தனது ஆரஞ்சு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கருப்பு பேட்ஜ் காரில் வந்தார். அவருக்காக அங்கே பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டு இருந்தது. அவருடன் பாதுகாப்பிற்கு மட்டும் 20 எஸ்கார்ட் எஸ்யுவி கார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. கடந்த மாதம் தான் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஜோடி துபாயின் சிட்டி வாக் மாலை சுற்றிப் பார்ப்பதும் அங்குள்ள தொழில்முனைவோருடன் உரையாடுவதும் வீடியோவில் தெரிகிறது. அந்த தம்பதியினர் வருகையால் மாலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

டிரெண்டிங்: மேலும், அனந்த் அம்பானி அங்குள்ள உள்ள ரிமோவா கடையில் பொருட்களை வாங்கும் வீடியோக்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அங்கே அவர் ஆடம்பர சூட்கேஸ் வாங்கி இருக்கிறார். ஆனால், இங்கே விஷயம் சூட்கேஸ் இல்லை. அதை வாங்க அவர் எப்படிச் சென்றால் என்பதே இணையத்தில் பேசுபொருள் ஆகி இருக்கிறது.

ரோல்ஸ் சாய்ஸ்: அந்த சூட்கேஸ் வாங்க அவர் ரூ.25 கோடி மதிப்புள்ள கான்வாய் ஒன்றில் சென்றுள்ளார். இந்தியாவில் ரூ.10 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்படும் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எஸ்யூவியில் ஆனந்த் அம்பானி சென்றுள்ளார். இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எஸ்யூவி தான் இந்தியாவில் விற்கப்படும் மிக விலையுயர்ந்த எஸ்யூவி ஆகும். ஆனந்த் அம்பானிக்கு இந்தியாவில் சொந்தமாக இந்த கார் இருப்பது குறிப்பிடத்தக்கது..

சொகுசு கார்கள்: ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் சென்ற கான்வாயில் 20 கார்கள் இருந்தது. அதில் காடிலாக் எஸ்கலேட்ஸ், ஜிஎம்சி யூகோன் டெனாலிஸ் மற்றும் செவ்ரோலெட் சப் அர்பன் உள்ளிட்ட அதிநவீன கார்கள் இருந்தன. சொகுசு கார்கள் மட்டுமின்றி ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் கூட அந்த கான்வாயில் இருந்தது. முழுக்க முழுக்க சொகுசு வாகனங்கள் நிரப்பிய அவரது கான்வாய் குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

முன்னதாக கடந்த மாதம் தான் இந்த தம்பதிக்கு ஜாம்நகரில் அவர்களின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் சர்வதேச அளவில் முக்கிய தொழிலதிபர்கள் பிரபலங்கள் எனப் பலரும் நேரில் கலந்து கொண்டனர். மூன்று நாள் நடந்த இந்த நிகழ்வு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.அப்போது ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா ஆகியோர் ஆனந்த் அம்பானி அணிந்திருந்த வாட்ச்சை வியந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+