பாண்டியா டாட் வச்சிட்டு.. ஒரு ரியாக்சன் தந்தான் ப்ரோ.. மறக்கவே மாட்டேன்! டிரெண்டான IND vs Pak மீம்ஸ்
துபாய்: இந்தியா பாகிஸ்தான் இடையே ஆசிய கோப்பை 2022 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தை வைத்து நிறைய மீம்ஸ்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
ஒரு இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் எவ்வளவு விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நேற்றைய ஆசிய கோப்பை 2022 தொடர் ஆட்டம் அமைந்து இருந்தது. கடைசி ஓவர் வரை திக் திக்.. பாண்டியாவின் கூல் பினிஷிங் காரணமாக இந்தியா வெற்றியை வசப்படுத்தியது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரன்கள் எடுத்து 19.5 ஓவரில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் கோலி 35, ஜடேஜா 35, ஹர்திக் பாண்டியா 33 என்று அதிரடியாக ரன்களை குவிக்க.. இந்திய அணி 19.4 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த போட்டியில் நடந்த சுவாரசியமான சில சம்பவங்கள் வைத்து நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

இந்தியா பாகிஸ்தான்
நேற்று போட்டியில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பினிஷிங் செய்தார். கடைசி வரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். அதோடு மிகவும் கூலாக "நான் பார்த்துகிறேன்" என்ற மோடில் இருந்தார். பின்னர் இவரே நான் தோனியை மூலம்தான் பினிஷிங்க்கை கற்றுக்கொண்டேன் என்று கூறினார். அதுவும் தோனியின் வைரி கம்பீரிடம் அதை கூறினார். இதை வைத்து பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

மீம்ஸ்
இந்த போட்டியில் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸ் அடிக்க முயன்று அவுட் ஆவார். அதன்பின் தினேஷ் கார்த்திக் இறங்கி சிங்கிள் அடித்து பாண்டியாவிற்கு ஸ்டிரைக் கொடுப்பார். பின்னர் 3வது பந்தில் பாண்டியா டாட் வைப்பார். அப்போது பாண்டியாவை தினேஷ் கார்த்திக் சந்தேகத்துடன் பார்ப்பார். அப்போது பாண்டியா நான் பார்த்துகிறேன் என்பது போல கண்களை மூடி கொடுக்கும் ரியாக்சன் மீமாக வைரலாகி வருகிறது.

ஹர்திக் பாண்டியா
நேற்று போட்டியில் ரசிகர்கள் அதிக அளவில் இருந்தனர். இவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் பந்து பேட்டில் படும் சத்தம் கூட கேட்காமல் இருந்தது. உதாரணமாக ஃபகார் சமான் பேட்டில் பந்து பட்டு அதை தினேஷ் கார்த்திக் பிடித்த போது அந்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. ஏன் தினேஷ் கார்த்திக்கு கூட கேட்கவில்லை. இதனால் அவர் விக்கெட் கேட்காமல் அமைதியாக இருந்தார். ஆனால் பாகிஸ்தான் கீப்பர் ரிஸ்வான் சாதாரண கேட்சிற்கும் விக்கெட் கேட்டார். அனைத்திற்கும் விக்கெட் கேட்டார். அவரின் செயலை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதை வைத்தும் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக்
கடந்த டி 20 உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை. இவரை அணியில் எடுத்ததே கடுமையான விமர்சனங்களை பெற்றது. அவர் பவுலிங்கும் செய்யவில்லை. அப்போது நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இப்போது அதே பேன்ஸ் அவரை பாராட்டுகின்றனர். இதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

வேகம்
நேற்று பாகிஸ்தான் பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். முக்கியமாக நசீம் ஷா மிகவும் வேகமாக வீசினார். மற்ற பாகிஸ்தான் பவுலர்களும் கிட்டத்தட்ட 150 கிமீ வேகத்தில் வீசினர். ஆனால் இந்திய அணி வீரர்கள் அவ்வளவு வேகத்தில் வீசவில்லை. இதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

கிண்டல்
இந்திய வீரர் பண்ட் நேற்று பிளேயிங் 11ல் ஆடவில்லை. இவரின் காதலி என்று கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஊர்வசி ரத்துலா. ஆனால் இவருக்கும் பண்டிற்கும் சமீப நாட்களாக கடுமையான மோதல் இணையத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க இவர் மைதானத்திற்கு வந்தார். கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன் என்று கூறியவர் நேற்று மைதானத்திற்கு வந்ததை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications