பேச முடியாமல் நா தழுதழுத்த பாபர்.. இந்தியர்களை மிரள வைத்த 19 வயது நசீம் ஷா.. கலங்க வைக்கும் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

துபாய்: யாருங்க இவர்.. இப்படி உயிரை கொடுத்து ஆடுகிறார்.. என்னங்க இப்படி பவுலிங் போடுகிறார் என்று இந்தியர்களிடம் பாராட்டு வாங்கி இருக்கிறார் பாகிஸ்தான் பவுலர் நசீம் ஷா. பாகிஸ்தான் அணிக்காக நேற்று காலில் காயம் ஏற்பட்ட போது கூட 18வது ஓவரை சிறப்பாக வீசினார் நசீம் ஷா.

அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஷாவிற்கு காலில் அடிபட அதன்பின் நொண்டியபடியே நடந்து 136 கிமீ வேகத்திற்கும் அதிகமாக பவுலிங் செய்து அசத்தினார். நேற்று பாகிஸ்தான் அணியில் 5 முழு நேர பவுலர்கள் மட்டுமே இருந்தனர்.

வேறு நல்ல ஆல் ரவுண்டர் பவுலர்கள் இல்லை. ஒரு சிலர் பவுலிங் செய்வார்கள் என்றாலும்.. 18வது ஓவரில் மாற்று பவுலரை பாதியில் இறக்கி ரிஸ்க் எடுக்க முடியாது. இதனால் காலில் அடிபட்டாலும் பெவிலியன் திரும்பாமல் வலியோடு பவுலிங் செய்தார் நசீம் ஷா.

இவர் ஒவ்வொரு பால் போட்ட பின்பும் தரையில் படுத்து கத்திய விதம் இந்திய ரசிகர்களையும் சேர்த்து இவருக்காக உருக வைத்தது. ஆனால் இந்த காயம் மட்டும் நேற்று இவர் கவனம் பெற காரணம் இல்லை.

பவுலிங்

பவுலிங்

ஷகீல் அப்ரிடி இல்லை. வேறு யார் பாகிஸ்தானில் இந்திய பவுலர்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதுதான் "அவுட் ஆப்" சிலபஸ்ஸாக வந்து குதித்தார் நசீம் ஷா. முதல் ஓவரிலேயே "ஸிங்" என்று இவர் போட்ட பாலில் கே.எல் ராகுல் டக் அவுட் ஆனார். பின்னர் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்த சூர்யா குமார் யாதவ் விக்கெட்டையும் எடுத்து அசத்தினார் நசீம் ஷா. இரண்டுமே கிளீன் போல்ட். இவர் கிட்டத்தட்ட நேற்று பாகிஸ்தானை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு வந்துவிட்டார்.

கோலி

கோலி

கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் இவரின் ஓவரில் கடுமையாக திணறினார்கள். பாகிஸ்தானின் புதிய பவுலிங் ஸ்டாராக உருவெடுத்து இருக்கும் இவருக்கு பின் ஒரு சோகமான கதை இருக்கிறது மக்களே! 19 வயதே ஆகும் இவர் மிகவும் வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவர். ஆனாலும் இவரின் பெற்றோர்கள் இருவருமே.. இவரையும், இவரின் சகோதரரையும் கிரிக்கெட் ஆடும்படி தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வந்துள்ளனர்.

ஊக்கம்

ஊக்கம்

ஆசிய கோப்பை தொடருக்கு திடீரென இவர் தேர்வான போது கூட இவரின் தந்தை.. "நீ போய் நன்றாக விளையாடு. இது பறக்க வேண்டிய நேரம். நன்றாக ஆடினால் அடுத்த 6 மாதத்தில் நீயும் சூப்பர் ஸ்டார். ஷகீன் அப்ரிடி போல உன்னையும் மக்கள் கொண்டாடுவார்கள். போய் ஆடு" என்று வழி அனுப்பி வைத்து இருக்கிறார். அப்பாவின் ஆசைப்படியே முதல் போட்டியிலேயே நசீம் ஷா பாகிஸ்தானின் சூப்பர் ஸ்டார் போல மாறிவிட்டார். இவர் பாகிஸ்தான் அணிக்குள் வந்ததே சுவாரசியமான கதைதான்.

உள்ளூர் போட்டிகள்

உள்ளூர் போட்டிகள்

பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷான் டெய்ட் பவுலிங் பயிற்சியாளராக இருக்கிறார். இது போக மேற்கு இந்திய தீவுகளின் ஜாம்பவான் பவுலர் ஆண்டி ராபர்ட்ஸ் பவுலிங் ஆலோசகராக இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் ராபர்ட்ஸ் லாகூருக்கு பவுலிங் கேம்ப் ஒன்றிற்காக வந்தார். அப்போதுதான் இவர் நசீம் ஷாவின் பவுலிங்கை பார்த்து உள்ளார். 16 வயதிலேயே நசீம் ஷா சிறப்பாக பவுலிங் செய்துள்ளார்.

வேகம்

வேகம்

இவரின் வேகம், பவுலிங் செய்யும் விதம் ராபர்ட்ஸை கவர்ந்து உள்ளது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக லீக் ஆட்டங்களில் ஆடி பாகிஸ்தான் அணிக்குள்ளும் இவர் வந்தார். ராபர்ட்ஸ் இவரை பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசியதும், கேம்பில் இவர் சிறப்பாக ஆடியதும் பாகிஸ்தான் அணிக்குள் இவர் நுழைய காரணமாக அமைந்தது. 2019ல் ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகம் ஆன நசீம் ஷா.. அதே தொடரில் தனது முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆடினார். ஆனால் இவருக்கு டி 20 போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த ஆஸ்திரேலிய தொடரின் போதுதான் கேப்டன் பாபர் ஆஸமிற்கு ஒரு வாட்ஸ் ஆப் கால் வந்துள்ளது. அதில் நசீம் ஷாவின் அம்மா மரணம் அடைந்துவிட்டதாக அவரின் அப்பா கண்ணீர்விட்டபடி கூறியுள்ளார். இதை கேட்ட பாபர் நசீம் ஷா ஒரு நிமிடம் ஒடிந்து போய் உள்ளார்.. ஏனென்றால் முதல் டெஸ்டில் நசீம் ஆடுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. நீ டீமில் இருக்கிறாய் என்ற நல்ல செய்திக்கு பதிலாக.. உன் அம்மா இறந்துவிட்டார் என்ற கெட்ட செய்தியை சொல்ல முடியாமல் பாபர் நா தளுதளுத்திருக்கிறது. நசீம் அறைக்கு சென்று அதை சொல்ல முயன்றுள்ளார். ஆனால் முதல் டெஸ்டிற்கு முன் பயிற்சி முடிந்து அசந்து தூங்கிக்கொண்டு இருந்த ஷாவை தொந்தரவு செய்யாமல்.. காலையில் எழுந்தவுடன் தகவலை சொல்லலாம் என்று பாபர் திரும்பி வந்துவிட்டார். அப்போது பாபர் ஆஸமிற்கு மீண்டும் ஒரு கால் வந்துள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

என் மகனிடம் காலையில் இந்த விஷயத்தை சொல்லுங்கள். ஆனால் என் மகனால் உரிய நேரத்தில் இங்கே வர முடியாது. அவன் மேட்ச் ஆடட்டும் என்று கூறியுள்ளார். அம்மாவின் மரணத்திற்கு கூட செல்லாமல் அந்த முதல் டெஸ்டில் நசீம் கலங்கிய கண்களோடு பவுலிங் செய்தார். அந்த மேட்சில் சிறப்பாக பவுலிங் செய்த நசீம் ஷா வார்னர் விக்கெட்டை எடுத்தார்.

இவரின் பவுலிங்கை அப்போதே பார்த்த இந்திய பவுலிங் கோச் பாரத் அருண்.. நசீம் பவுலிங்கை பார்த்தீர்களா.. சிறப்பாக வீசுகிறார் என்று இந்திய வீரர்களிடம் தெரிவித்து இருக்கிறார். இதன்பின் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்ட நசீம் ஷா பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சிறப்பாக பந்து வீசி டி 20 ஆசிய கோப்பை அணியில் இடம் பிடித்தார்.

நேற்று முதல் போட்டியிலேயே காயத்தோடு ஆடி பாகிஸ்தானியர்களை மட்டுமின்றி இந்தியர்களையும் கவர்ந்து உள்ளார் இந்த இளம் புயல் நசீம் ஷா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+