Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாயில் தங்கம் வாங்கினால்.. காசு மிச்சப்படுத்த முடியுமா? முதலுக்கே மோசம்.. உஷாரா இருங்க!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் தங்கம் விலை குறைவு. இந்திய சந்தையை ஒப்பிடும்போது எப்போதும் விலை 5-7% வரை குறைவாகவே இருக்கும். இப்படி இருப்பதால், துபாயில் தங்கம் வாங்கி, இந்தியாவுக்கு கொண்டுவரலாம் என பலரும் யோசிக்கலாம். ஆனால் இனி அப்படி செய்ய முடியாது.

துபாயில் தங்கம் வாங்கி, அதை இந்தியாவுக்குள் கொண்டுவருவதில் இரண்டு முக்கியமான சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சிக்கல்கள் தற்போது தீவிரமாக இருப்பதால் துபாய் தங்கத்தில் இனி லாபம் பார்க்க முடியாது.

gold gold price

ஏன் துபாயில் விலை குறைவு?

ஏன் துபாயில் தங்கம் விலை குறவாக இருக்கிறது? ஏனெனில் அங்கு தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைவு. இந்தியாவில் 6% வரி போடப்படுவதால் இங்கு விலை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இங்கு தங்கத்தின் மீது 3% ஜிஎஸ்டி வரி உள்ளது. ஆனால் துபாயில், சுற்றுலா பயணிகள் வாங்கிய தங்கத்திற்கு அவர்கள் செலுத்திய 5% வாட் வரியை, விமான நிலையங்களில் திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறது. மட்டுமல்லாது துபாயில் தங்க சந்தைகளில் போட்டி அதிகம் என்பதால் நகைகளுக்கான செய்கூலி சேதாரம் குறைவு.

துபாய் தங்கம்

என்னதான் விலை குறைவாக இருந்தாலும், அங்கு நகை வாங்கி அதை அப்படியே இங்கு கொண்டுவர முடியாது. காரணம், இந்தியாவுக்குள் தங்கம் எப்படி வர வேண்டும் என்று சுங்கத்துறை வரைமுறைகளை விதித்திருக்கிறது. அதன்படி ஆண்கள் அதிகபட்சமாக 20 கிராம் அல்லது ரூ.50,000 மதிப்புக்கு மிகாமல் இருக்கும் தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வரலாம். பெண்கள் எனில், 40 கிராம் அல்லது ரூ.1 லட்சம் மதிப்புக்குள் உள்ள நகைகள் வரி இல்லாமல் இந்தியாவுக்குள் கொண்டு வர முடியும்.

முதல் பிரச்சனை

இங்குதான் பிரச்சனை இருக்கிறது. வரி இல்லாமல் தங்கம் கொண்டுவர வேண்டும் எனில், குறைந்தபட்சம் 1 ஆண்டு துபாயில் தங்கியிருக்க வேண்டும். 6 மாதம் தங்கியிருந்தால் இந்த சலுகை கிடைக்காது. அதேபோல துபாயிலிருந்து கொண்டு வரப்படும் தங்கம், நகை வடிவில் இருக்க வேண்டும். தங்க நாணயமாகவோ, கட்டியாகவோ இருக்க கூடாது. இருந்தால் முழுமையாக வரி செலுத்த வேண்டும்.

பெண்கள் எவ்வளவு கொண்டு வரலாம்?

இதைவிட முக்கியம், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் நுழைபவர்கள் கொண்டுவரும் தங்கத்திற்கான எடை மற்றும் அதன் மதிப்பு என இரண்டுக்கும், உச்சவரம்பு இருக்கிறது. அதாவது, தற்போதைய விலையில் தங்கம் 10 கிராம் ரூ.1.40 லட்சம். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு ரூ.50,000. இந்த தொகைக்கு வெறும் 3.5 கிராம் தங்கம் மட்டுமே இந்தியாவுக்குள் கொண்டுவர முடியும். பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு ரூ.1 லட்சம்தான். எனவே 7 கிராம் மட்டுமே கொண்டுவர முடியும்.

இரண்டாவது சிக்கல்

துபாயிலும் தங்கம் விலை அதிகரித்திருக்கிறது என்பதுதான் இரண்டாவது சிக்கல். துபாயில் இன்றைய தேதியில் 24k தங்கம் 10 கிராம் ரூ.1.35 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.1.41 லட்சம். இதுவே, 22k தங்கம் 10 கிராம் துபாயில் ரூ.1.25 லட்சமாகவும், இந்தியாவில் ரூ.1.29 லட்சமாகவும் விற்பனையாகிறது. எனவே அங்கு தங்கத்தை வாங்கி இங்கு கொண்டுவருவதில் பெரிய லாபம் கிடையாது.

ஆனால் இதில் ஒரு ஆறுதல் செய்தி இருக்கிறது. விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளிநாடுகளிலிருந்து தங்கம் எடுத்துவர வைக்கப்பட்டிருக்கும் ரூ.50,000 - 1,00,000 வரம்பை, தளர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+