நடிகர் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது.. காயமின்றி தப்பினார்!
துபாய்: நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட போது அஜித்குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. காரின் முன்பகுதியும் பின்பகுதியும் சேதமடைந்த நிலையில், அஜித்குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கார் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் புதிதாக ரேஸிங் நிறுவனம் தொடங்கியுள்ள நிலையில், அந்த அணியானது துபாயில் நடக்கின்ற கார் ரேசில் பங்கேற்க இருக்கிறது. இதற்கான கார் ரேஸ் பயிற்சியானது கடந்த 30 ஆம் தேதி முதல் துபாயில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய துணைக்கண்டத்தில் பல்வேறு நாடுகளில் இந்த கார் ரேஸ் போட்டியானது நடைபெற இருக்கிறது.

இதற்கான முதல் தொடர் போட்டியானது துபாயில் வரும் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் அஜித்குமாரின் நிறுவனம் சார்பில் அணி பங்கேற்க இருப்பதால், இதற்கான பயிற்சி துபாயில் நடந்து வந்தது. இதற்காக இன்று நடிகர் அஜித்குமார் துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் அஜித்குமார் ஈடுபட்டார்.
அப்போது அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் தடுப்புச் சுவர் மீது மோதி சுழன்றடித்தது. இதில் காரின் முன்பகுதியும், பின்பகுதியும் நொறுங்கியது. எனினும் நல்வாய்ப்பாக அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இது தொடர்பான சிசிடிவி காட்சியும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அப்போது அஜித்குமார் ஓட்டிச்செல்லும் கார் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து வருகிறது. திடீரென தடுப்புச்சுவரில் மோதி கார் அப்படியே சுழன்றடித்து நிற்கிறது. உடனே அங்கிருந்த ஒருவர் அஜித்குமாரை காரில் இருந்து வெளியே அழைத்து செல்கிறார். நடிகர் அஜித்குமாரும் சாதாரணமாக நடந்து செல்கிறார்.
நடிகர் அஜித்குமார் கார் விபத்தில் சிக்கியது என்று தெரிந்ததும், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படாததால் நிம்மதி அடைந்துள்ளனர். நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக உள்ளது.
குட் பேட் அக்லி வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications