ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ராஜமரியாதை அளித்து வரும் துபாய் அரசு!
துபாய்: அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தொழிலதிபர்களை சந்தித்து பேசி வருகிறார்.
Recommended Video
இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் உதயசந்திரன் மற்றும் அனு ஜார்ஜ் ஆகியோரும், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உடன் இருந்து வருகிறார்கள்.
டிப்டாப்பாக கோட் சூட் அணிந்து ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துபாய் பயணம்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் துபாய் என்பதால், இது பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. துபாய் எக்ஸ்போவில் பங்கேற்று தமிழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறைகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

தொழில் வளர்ச்சி
தமிழகத்தில் தொழில்வளர்ச்சியை பெருக்க தமிழக அரசிடம் உள்ள திட்டங்கள் குறித்தும் தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவது பற்றியும் இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முதலமைச்சரின் தனிச் செயலாளர்களான உதயசந்திரனும், அனு ஜார்ஜும் உடன் இருந்துள்ளனர்.

தொழிலதிபர்கள்
கேரளத்தை பூர்வீகமாக கொண்டு துபாயில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் நடத்தி வரக்கூடிய லூலூ குழுமங்களின் தலைவரும், தொழிலதிபருமான யூசுஃப் அலி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருக்கிறார். இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மேலும் சில முக்கியத் தொழிலதிபர்கள் சிலரையும் முதலவர் ஸ்டாலின் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிப்டாப் உடை
துபாயில் டிப் டாப்பாக கோட் சூட் அணிந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வருகிறார். இதேபோல் அவருக்கு துபாய் அரசு சார்பில் முழு மரியாதை கொடுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்படுவதால் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications