உலகின் மிக பெரிய கட்டிடமான.. புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த செம்மொழியான தமிழ்! முதல்வர் பார்வையிட்டார்
துபாய்: துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் கீழடியின் காணொலி ஒளிபரப்பான நிலையில், அதனை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்
Recommended Video
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் உலக எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இன்று (மார்ச் 25) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அங்குத் தமிழ்நாடு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே சர்வதேச முதலீடுகளை ஈர்க்க நான்கு நாள் பயணமாகத் துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த எக்ஸ்போ கண்காட்சியில் உள்ள தமிழ்நாட்டிற்கான அரங்கைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில் சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொல்தமிழர் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் கீழடியின் காணொலி ஒளிபரப்பப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்
முன்னதாக, இன்று ஐக்கிய அமீரகத்தின் பொருளாதார துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து அவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலை குறித்து எடுத்துரைத்த ஸ்டாலின் அவர்களுக்கு, 'Karunanidhi A Life' என்ற புத்தகத்தையும் பரிசாக அளித்தார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம்












Click it and Unblock the Notifications